• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • பட்டா கொடுத்து ஒன்னறை வருடம் ஆகியும் இதுவரையில் வீட்டை கட்டி கொடுக்காத நிலையில், குடும்பத்தினருடன் தங்கி இருந்த இடத்தை பூட்டிய கொடுமை.

பட்டா கொடுத்து ஒன்னறை வருடம் ஆகியும் இதுவரையில் வீட்டை கட்டி கொடுக்காத நிலையில், குடும்பத்தினருடன் தங்கி இருந்த இடத்தை பூட்டிய கொடுமை.

லட்சுமி காந்த்

UPDATED: Sep 30, 2024, 12:08:30 PM

காஞ்சிபுரம் மாவட்டம்

ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் நடைபெறுகிறது.

இன்று காலை 11.30 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு 51 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் கையில் பெட்ரோல் கேன் , தீப்பெட்டி மற்றும் பட்டா உள்ளிட்ட ஆவணங்களை எடுத்துக் கொண்டு மனு வாங்கும் இடத்திற்கு அருகே வந்து தரையில் அமர்ந்தார்.

Breaking News Today In Tamil

இதைக் கண்டு அதிர்ந்து போன காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் ஓடி வந்து அந்தப் பெண்மணி இடம் விசாரணை செய்ததில் , 

காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அடுத்த காவி தண்டலம் கிராமத்தை சேர்ந்தவர் என்றும் தன்னுடைய பெயர் காமாட்சி வயது 51 என்றும், குடும்பத்துடன் கூடை முடையும் தொழில் செய்து வருவதாகவும், கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பாக அரசாங்கம் பட்டா அளித்து வீடு கட்டிக் கொடுப்பேன் எனக் கூறியது .

Latest Kancheepuram News Today In Tamil 

அது தொடர்பாக நாங்கள் தொடர்ந்து கேட்கும் போதெல்லாம், இன்று செய்வோம், நாளை செய்வோம் இன்று செய்வோம் நாளை செய்வோம் என கூறி கொண்டே வருகின்றனர். 

இது நாள் வரையில் வீடும் கட்டிக் கொடுக்கவில்லை . இந்த ஒன்றரை ஆண்டு காலமாக சமுதாயம் கூடம் போல் உள்ள அரசாங்க இடத்தில்தான் நான், என் கணவர் ,மகன் ,மருமகள், பேரப்பிள்ளைகள் தங்கி வந்ததாகவும் , 

பட்டா

திடீரென நேற்று இரவு நாங்கள் தங்கி உள்ள அரசாங்க இடத்தை யாரோ பூட்டு போட்டு பூட்டி விட்டு சென்று விட்டதாகவும் , அதனால் நாங்கள் படுக்க இடமில்லாமல் சாலை ஓரத்தில் படுத்து தூங்கியதாகவும் , இதனால் மனசு உடைந்து போய்தான் மாவட்ட ஆட்சியரிடம் வீட்டை கட்டிக் கொடுங்கள் அல்லது தீக்குளித்து இறந்து போகின்றேன் என கேட்க வந்ததாகவும் தெரிவித்தார்.

காமாட்சி இடம் பொறமையாக பேசிய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரின் உதவியாளர் சத்யா அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

Today Latest District News

மாவட்ட ஆட்சியர் அவர்களின் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மக்கள் குறைதீர்க்கும் நாள் அரங்கின் அருகில் மேலே ஊற்றிக் கொள்ள முற்பட்ட வரை போலீசார் தடுத்து நிறுத்தி அவர் கையில் வைத்திருந்த தீப்பெட்டி மற்றும் பெட்ரோல் கேனை பிடுங்கி கொண்டு அவரை சமாதானப்படுத்தினர்.

இந்த சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு காணப்பட்டது.

 

VIDEOS

Recommended