ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் நீர் கசியும் மேற்கூரை அச்சத்துடன் வரும் நோயாளிகள்.

சசிகுமார்

UPDATED: Oct 1, 2024, 11:15:05 AM

கிருஷ்ணகிரி மாவட்டம்

ஊத்தங்கரை அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு கட்டிடம் ஒப்பந்ததாரரின் அலட்சியத்தால் மேற்கூரை வருடக்கணக்கில் மழைக்காலங்களிலும் இதர நேரங்களிலும் நீர் கசிவு ஏற்பட்டு வருகிறது அவசர சிகிச்சை பிரிவில் 50 க்கும் மேற்பட்ட நோயாளிகள் அன்றாடம் சிகிச்சை பெற்று வருகின்றனர் மேலும் மருத்துவர்களும் அதே கட்டிடத்தில் தான் மருத்துவம் பார்த்து வருகின்றனர்

இந்த நிலையில் அவசர சிகிச்சை பிரிவு மேற்கூரை தொடர்ந்து நீர்க்கசிந்து காணப்படுவதால் என்று விழுமோ என்ற அச்சத்தில் நோயாளிகள் மரண பயத்துடன் வருகின்றனர் மேலும் மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறையும் கழிப்பிட வசதிகள் இல்லாமலும் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்

Latest Krishnagiri District News In Tamil 

இதனைத் தொடர்ந்து ஊத்தங்கரை அடுத்த பெரிய தள்ளபடி பகுதியில் அரசு பள்ளியில் மேற்கூரை இடிந்து விழுந்து பல குழந்தைகள் பலத்த காயமுற்றது குறிப்பிடத்தக்கது 

ஒப்பந்ததாரர்களை தகுந்த முறையில் தேர்ந்தெடுத்து அவர்கள் கட்டும் கட்டிடப் பணிகளை ஒப்படைக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்...

உயிர் சேதம் ஏற்படும் முன்பே நடவடிக்கை எடுப்பார்களா சுகாதாரத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம்.

 

VIDEOS

Recommended