நில மோசடி விவகாரம் எனக்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவேன் - கவுதமி
கார்மேகம்
UPDATED: Aug 13, 2024, 8:44:38 AM
இராமநாதபுரம்
நில மோசடி விவகாரத்தில் எனக்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவேன் என ராமநாதபுரம் கோர்ட்டுக்கு வந்திருந்த நடிகை கவுதமி கூறினார்
( நிலத்தில் முதலீடு)
நடிகை கவுதமி சினிமாவில் நடித்து பிரபலமாக இருந்த காலகட்டத்தில் அவரது ரசிகரான அழகப்பன் என்பவர் அறிமுகமாகி உள்ளார்
இந்த நிலையில் நடிகை கவுதமி தனது சொத்துக்களை பாதுகாத்து நிர்வகிக்கும் பொறுப்பை அழகப்பனுக்கு வழங்கினாராம் மேலும் நடிகை கவுதமி சினிமாவின் மூலம் கிடைத்த பணத்தை அழகப்பனின் ஆலோசனையின் படி நிலத்தில் முதலீடு செய்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம்
முதுகுளத்தூர் கண்டிலான் பகுதி துலுக்கன்குறிச்சி கிராமத்தில் 150 ஏக்கர் விவசாய நிலம் விற்பனைக்கு வரவுள்ளதாகவும் நில புரோக்கர் ( நெல்லியான்) என்பவரிடம் 2016 மார்ச் மாதம் பேசி முடித்து விட்டதாகவும் அதற்கான தொகை ரூ.3 கோடியே 16 லட்சம் வேண்டும் என்றும் அழகப்பன் கவுதமியிடம் கேட்டுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது
நில மோசடி
( செபி) நிறுவனம் விற்பனை செய்யக் கூடாது என பகிரங்கமாக அறிவித்த மேற்கண்ட நிலத்தின் ஒரு பகுதியை அது தொடர்பான முழு விவரம் தெரிந்தும் அழகப்பன் ( நெல்லியான்) தனியார் நிர்வாக இயக்குனர்களான ஜோசப் ஜெயராஜ் பாக்கிய சாந்தி ஜெயபாலன் சந்தான பீட்டர் அழகப்பனின் கூட்டாளிகளான ரமேஷ் சங்கர்ஷோனாய் கே.எம். பாஸ்கர் விசாலாட்சி அழகப்பனின் மனைவி நாச்சியாள் பிள்ளைகளான சொக்கலிங்கம் அழகப்பன் சிவ. அழகப்பன் ஆர்த்தி அழகப்பன் ஆகியோர் கூட்டு சதி செய்து மோசடி செய்து விட்டார்களாம்
மேலும் சில மோசடிகளும் அந்த நில விவகாரத்தில் நடந்துள்ளதாக கூறப்படுகிறது
Latest Crime News
இது தொடர்பான நடிகை கவுதமி புகாரின் பேரில் ராமநாதபுரம் நில மோசடி தடுப்பு பிரிவு போலீஸ் சார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்
இந்த நிலையில் அழகப்பன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் அவர் ஜாமின் கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் ராமநாதபுரம் கோர்ட்டில் நேற்று நடிகை கவுதமி தனது வக்கீல் நாராயணன் மூலம் ஆஜராகி மேற்கண்ட அழகப்பன் உள்ளிட்டோர் பல்வேறு பகுதிகளில் கோடிக்கணக்கில் நில மோசடி செய்துள்ளனர் எனவே அவர்களுக்கு ஜாமீன் வழங்க கூடாது என்று மனுதாக்கல் செய்தார் அந்த மனு மீதான விசாரணையை நீதிபதி பிரபாகரன் தள்ளி வைத்தார்.
ALSO READ | தமிழ்நாட்டில் முதல் சிறந்த யானை பாகன் விருது.
நடிகை கவுதமி
பின்னர் கவுதமி கோர்ட்டில் இருந்து வெளியில் வந்த போது நிருபர்களிடம் கூறுகையில்
கோர்ட்டில் வழக்கு நடந்து வருவதால் அது தொடர்பாக விரிவாக பேசமுடியாது அதே நேரம் எனக்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவேன் எவ்வளவு நாளானாலும் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் நான் உறுதியுடன் போராடுவேன் என்றார்.