100 யூனிட் விலையில்லா மின்சாரம் - ஈபிஎஸ் அறிக்கை

Bala

UPDATED: May 27, 2024, 12:08:39 PM

ADMK News 

உரிமையாளர்கள் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் இருக்கும்பட்சத்தில், வாடகைதாரர்களும் இருந்தால் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்க வேண்டும்.

வாடகைதாரர் ஒருவர் வீட்டை காலி செய்தால், மீண்டும் அதே வீட்டிற்கு வாடகைக்கு வருபவர்கள் விலையில்லா மின்சாரம் மற்றும் குறைந்த மின் கட்டண வசதியைப் பெறுவதற்கு வசதியாக மின் இணைப்பை துண்டிக்கக்கூடாது.

மின் கட்டணம் செலுத்தாமல், மின் இணைப்பைத் துண்டிக்க நேரிட்டால், சம்பந்தப்பட்ட மின் நுகர்வோர்களுக்கு ஓரிரு நாட்களுக்கு முன்னதாகவே தெரிவித்து, அவர்கள் மின் கட்டணத்தைச் செலுத்த அறிவுறுத்த வேண்டும் - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

 

VIDEOS

Recommended