ஆய்வகத்தில் ஒரு பாம்பை முழுங்கிய 6 அடி நீளமுள்ள நல்ல பாம்பு தலைதரித்து ஓடிய மாணவர்கள்.

சுரேஷ் பாபு

UPDATED: Sep 30, 2024, 6:50:35 PM

திருவள்ளூர் மாவட்டம்

திருத்தணி தாலுகா சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது சுப்பிரமணியசாமி அரசினர் கலைக்கல்லூரி இந்த கல்லூரியில் 2000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் மாணவிகள் பயின்று வருகின்றனர் 

இந்தக் கல்லூரிக்கு உள்ளே வேதியல் ஆய்வகத்தில் மாணவர்கள் கல்லூரி பேராசிரியர்கள் இருக்கும்பொழுது பணி செய்து கொண்டிருக்கும் போது திடீரென்று 6 அடி நீளம் உள்ள நல்ல பாம்பு வந்துள்ளது இதனை கண்டவுடன் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தலைதரிக்க ஆய்வகத்தில் இருந்து வெளியே ஓடிவந்தனர்.

பாம்பு

இந்த வேதியல் ஆய்வகத்தில் பாம்பு வந்ததை உடனடியாக திருத்தணி தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் வேதியல் ஆய்வகத்தில் ஒளிந்து இருந்த ஆறடி நீளமுள்ள நல்ல பாம்பை பிடிப்பதற்கு முயற்சி செய்தனர் அப்பொழுது அந்த பாம்பு மூன்று அடி நீளமுள்ள மற்றொரு பாம்பை விழுங்கி இருந்தது தெரிய வந்தது

Latest Thiruthani News Today In Tamil 

இந்த பாம்பை பிடிக்கும் பொழுது அந்த பாம்பு வயிற்றில் இருந்து வெளியில் வந்தது , உடனடியாக தீயணைப்பு படை வீரர்கள் உயிருடன் ஆறடி நீளம் உள்ள நல்ல பாம்பை பிடித்து அதன் வயிற்றில் இறந்து இருந்த மற்றொரு பாம்பையும் பிடித்து வனப்பகுதியில் எடுத்துச் சென்று விட்டனர்.

இதனால் கல்லூரி அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

VIDEOS

Recommended