- முகப்பு
- மாவட்டச் செய்தி
- நூறாண்டுகள் பழமையான கோயிலை இந்து சமய அறநிலையத்துறையினர் கைப்பற்ற முயற்சி செய்ததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்.
நூறாண்டுகள் பழமையான கோயிலை இந்து சமய அறநிலையத்துறையினர் கைப்பற்ற முயற்சி செய்ததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்.
லட்சுமி காந்த்
UPDATED: Oct 25, 2024, 1:29:07 PM
காஞ்சிபுரம் மாவட்டம்
வாலாஜாபாத் விவி கோவில் தெருவில் சுமார் 100 ஆண்டு காலம் பழமையான பொதுமக்களுக்கு பாத்திய பட்ட தனியார் வசம் உள்ள கிராமத்து கோவிலான ஸ்ரீ கண்ணபிரான் திருக்கோவிலை, இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள்,
திமுகவினரின் தூண்டுதலின் பேரில் கைப்பற்ற முயற்சி செய்ததை கண்டித்து அப்பகுதியை சேர்ந்த சுமார் 30க்கும் மேற்பட்ட மக்கள் கோயில் முன்பு சாலையில் அமர்ந்து, திமுகவினர் கைப்பாவையாக செயல்படும் இந்து சமயத்துறை அதிகாரிகளை கண்டித்து கோஷமிட்டனர்.
இது தொடர்பாக அருள்மிகு ஸ்ரீ கண்ணபிரான் திருக்கோவில் அறக்கட்டளையின் பொருளாளர் பா.கண்ணன் அவர்கள் கூறும்போது, இது கிராமத்துக் கோவில் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
இந்து சமய அறநிலைத்துறையை சேராத இந்த கோவிலை சுற்றிலும் உள்ள இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தொழில் துறை அமைச்சர் தாமோ.அன்பரசன் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தோம்.
இந்த விபரம், வாலாஜாபாத்தில் உள்ள திமுக கட்சியை சேர்ந்த மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கே.தியாகராஜனுக்கு தெரியவந்தது.
கோவில் இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ள நபருக்கு உடந்தையாக செயல்பட்டு வரும் கே.தியாகராஜன், இந்து சமய அறநிலையத்துறைக்கு அழுத்தம் கொடுத்து , இந்த கோவிலை கைப்பற்ற வேண்டும் என கட்டாயப்படுத்தி உள்ளார்.
இந்து சமயத்துறை அதிகாரிகள் இன்று நேரில் வந்து பொதுமக்கள் வசம் இருந்த கோவிலை கைப்பற்ற முயற்சித்தனர்.
இதனை கண்டித்து அப்பகுதியை சேர்ந்த முப்பதுக்கும் மேற்பட்ட மக்கள் கோயில் முன்பு சாலையில் அமர்ந்து திமுகவின் கைப்பாவையாக செயல்படும் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளை கண்டித்து கோஷமிட்டனர்.
பொதுமக்களின் எதிர்ப்பை கண்டு பின் வங்கிய இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் கோவிலை அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு கூறிவிட்டு அங்கிருந்து அகன்றனர் என்றார்.
மேலும் கூறுகையில், இந்தக் கோவிலில் ஒரு பைசா கூட வருமானம் கிடையாது. உண்டியலும் வைப்பது இல்லை. பொதுமக்களே அர்ச்சகர்க்கு சம்பளம், மின் கட்டணம், பராமரிப்பு செலவுகள் ஆகியவற்றை பங்கெடுத்து அளிக்கின்றனர்.
அது மட்டும் இன்றி ஆண்டுதோறும், இந்த கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா , புரட்டாசி மாதம் உற்சவம், வைகுண்ட ஏகாதேசி சொர்க்கவாசல் திறப்பு, அனுமான் ஜெயந்தி விழா , ராமநவமி விழா போன்ற திருவிழாக்களும், திருமணம் மற்றும் நிச்சயதார்த்தம் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றது.
ஏற்கனவே இந்த கோயிலுக்கான அறக்கட்டளை பதிவு செய்யப்பட்டு செயல்பட்டு வருகின்றது. கோவிலை சுற்றி உள்ள பகுதிகளில் உள்ள வீட்டு மனைகளின் விலைகள் அதிகரிப்பதை கண்ட ஆளுங்கட்சியினர் .
கே.தியாகராஜனை தூண்டிவிட்டு இந்து சமயத்துறை அதிகாரிகள் மூலம் இந்த கோவிலை கைப்பற்றி , பின்னர் விற்பனை செய்ய முயற்சிப்பதால் தான் இது போன்ற அராஜகத்தில் திமுகவினர் ஈடுபடுகின்றார்கள் என வேதனையுடன் தெரிவித்தார்.
கோயில் முன்பு நடந்த இந்த சாலை மறியல் போராட்டத்தில் அதிமுக, திமுக ,பாஜக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.