• முகப்பு
  • குற்றம்
  • 150 கிலோ அழகிய காய்கறிகளை வைத்திருந்த சமோசா தயாரிப்பு கடைக்கு சீல்.

150 கிலோ அழகிய காய்கறிகளை வைத்திருந்த சமோசா தயாரிப்பு கடைக்கு சீல்.

JK

UPDATED: Oct 5, 2024, 9:30:57 AM

திருச்சி மாவட்டம்

முசிறி நகராட்சி பகுதியில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில் அலுவலர்கள் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர்.

அப்போது முசிறி கைகாட்டியில் வழக்கறிஞர் மகாலிங்கம், பாஸ்கர், முத்து டீ கடை, காந்தி நகர் தமிழ்செல்வன் மளிகைகடை காந்தி நகர், சாலியர் தெரு சக்தி டீ ஸ்டால், சேலம் மெயின்ரோடு சுந்தரவல்லி பெட்டிகடை ஆகிய 5 கடைகளிலும் 1 கிலோ 215 கிராம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்ததை அலுவலர்கள் பறிமுதல் செய்து 5 கடைகளுக்கும் சீல் வைத்தனர்.

Latest Crime News Today In Tamil 

மேலும் அபராதம் விதிக்கப்பட்டு மேல்நடவடிக்கைக்காக முசிறி காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முசிறி அருகே அண்ணா நெசவாளர் காலணியில் செந்தில்குமார் என்பவர் முசிறி பகுதி கடைகளுக்கு சமோசா மொத்த விற்பனை செய்வதற்கு அழுகிய காய்கறிகளை கொண்டு சமோசா தயாரித்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

சுமார் 150 கிலோ அழுகிய காய்கறிகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும் சமோசா தயாரிப்பு நிறுவனத்திற்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Breaking News Today In Tamil 

இந்த ஆய்வின்போது உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பாண்டி, சையத் இப்ராஹிம், செல்வராஜ், மகாதேவன், அன்புச்செல்வன், வடிவேல், கந்தவேல், சண்முகசுந்தரம் மற்றும் போலீசார் உடனிருந்தனர். 

இது குறித்து மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ஆர்.ரமேஷ்பாபு கூறுகையில், திருச்சி மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களோ அல்லது கலப்படம் செய்யப்பட்ட உணவுப் பொருட்களோ அல்லது சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பில் ஈடுபட்டு விற்பனை செய்வது தெரிய வருமாயின் 96268 39595, 94440 42322 என்ற தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரியபடுத்த வேண்டும் என்றும், தகவல் அளிப்போரின் தகவல் ரகசியம் காக்கப்படும் என்றும் கூறினார்.

 

VIDEOS

Recommended