- முகப்பு
- மாவட்டச் செய்தி
- போளிவாக்கம் தரைப்பாலம் மூழ்கியது சாலையின் இருபுறமும் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து ஊர்ந்து செல்வதால் பொதுமக்கள் அவதி
போளிவாக்கம் தரைப்பாலம் மூழ்கியது சாலையின் இருபுறமும் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து ஊர்ந்து செல்வதால் பொதுமக்கள் அவதி
சுரேஷ்பாபு
UPDATED: Dec 13, 2024, 10:54:32 AM
திருவள்ளூர் மாவட்டம்
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது.
இந்நவிலையில் இந்த மழையால் திருவள்ளூர்- ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் உள்ள போளிவாக்கம் தரைப்பாலம் மழைநீரில் மூழ்கியது. இதனால் திருவள்ளூர்- ஸ்ரீபெரும்புதூர் சாலை வழியாக செல்லும் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.
திருவள்ளூரிலிருந்து ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தொழிற்சாலைகளுக்கு 500-க்கும் மேற்பட்ட வாகனங்கள் நாள்தோறும் இந்த பாதையை கடந்து செல்கின்றன .
Latest Online News Today In Tamil
அதேபோல் தொழிற்சாலைகளில் இருந்து கனரக வாகனங்களும் அதிக அளவில் இவ்வழியாக செல்கின்றன. அதேபோல் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் வேலைக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இதனால் சாலையின் இருபுறமும் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து மெதுவாக ஊர்ந்து செல்வதால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
India Today News
ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் இந்த தரைப்பாலம் மூழ்கி விடுவதால் உயர்மட்ட பாலம் அமைக்க கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே விரைந்து உயர்மட்ட பாலம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வாகன போட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.