இராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு வட்டாட்சியர் கைது.
பரணி
UPDATED: Aug 1, 2024, 8:29:23 AM
இராணிப்பேட்டை
திண்டிவனம் - நகரி இரயில் பாதைக்காக இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நிலங்களை அளிக்க வருவாய் துறை சார்பில் நிலங்கள் கையகப்படுத்தல் பிரிவு அலுவலகம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படுகிறது.
மதிவாணன் எனும் தனி வட்டாட்சியர் இங்கு பணியாற்றி வந்தார். சோளிங்கரைச் சேர்ந்த கோவிந்தராஜின் 1913 சதுர மீட்டர் நிலத்தை கையகப்படுத்தி, அதற்கான தொகை ரூ.6,27,080 வழங்கப்பட்டது.
லஞ்சம்
இதற்கு உயிலை திருப்பித் தர மதிவாணன் ரூ.6,000 லஞ்சமாக கேட்டு, ரூ.4,000க்கு சம்மதித்தார். நிலத் தொகையை பெற்றபின் உயிலை அளிக்கும்போது வழங்குவதாக கூறினார்.
கோவிந்தராஜ் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். போலீஸார் ஆலோசனைப்படி கோவிந்தராஜ் புதன்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள நிலமெடுத்தல் பிரிவில் மதிவாணனிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை வழங்கினார்.
Ranipet Latest News
அப்போது மறைந்திருந்த போலீசார் மதிவாணனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக புகுந்து வட்டாட்சியரை கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு