• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தெய்வீக பக்தர்கள் பேராவியின் சார்பில் சிதம்பரம் நடராஜர் ஆலய தீட்சதர்ர்களை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தெய்வீக பக்தர்கள் பேராவியின் சார்பில் சிதம்பரம் நடராஜர் ஆலய தீட்சதர்ர்களை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

சண்முகம்

UPDATED: Jun 22, 2024, 10:22:53 AM

ஐந்து பஞ்சபூதங்கள் தலமாக விளங்குவது சிதம்பரம் இந்த நடராஜர் ஆலயத்தில் ஹரியும் சிவனையும் ஒரே இடத்தில் வணங்கலாம் அப்படி வடிமமைக்கப்பட்டுள்ளது

சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் சிவனுக்கு தருகின்ற முக்கியத்தை தில்லை கோவிந்தராஜ பெருமாளுக்கு தீட்சதர்கள் தருவது கிடையாது தில்லை பெருமாள் ஆலயத்தில் பிரம்ம உற்சவம் நடைபெறுவதற்கு தீட்சதர்கள் தடையாக இருக்கின்றார்கள் 

இது தொடர்பாக சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் உள்ள தில்லை கோவிந்தராஜ பெருமாள் டிரஸ்டி மற்றும் பொதுமக்கள் மற்றும் தெய்வீக பேரவையின் சார்பில் சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது

நீதிபதிகள் பிரம்ம உற்சவம் நடந்தால் என்ன என்று கேள்வி கேட்டனர் இதற்கு நடராஜர் ஆலய தீட்சதர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றார்கள் சிதம்பரம் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது

சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு பிரமோற்சவம் நடைபெற்றது பின்பு வந்த தீட்சதர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இதுவரை நடைபெறவில்லை இந்த பிரம்மோற்சவம் நடைபெற வேண்டும் என்று தமிழக அரசும் தெய்வீக பேரவையும் தில்லை கோவிந்தராஜ பெருமாள் ட்ரெஸ்டியும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார்கள்

வருகின்ற 24 ஆம் தேதி வழக்கு நடைபெறுகிறது சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சதர்கள் ஒவ்வொரு முறையும் வாய்தா வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் இதனை எதிரொலியாக தெய்வீக பக்தர்கள் பேரவையின் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

 

VIDEOS

Recommended