• முகப்பு
  • குற்றம்
  • ஓய்வு பெற்ற பெண் இன்ஸ்பெக்டர் கொலை மதிமுக மாவட்டச் செயலாளரிடம் போலீஸார் ரகசிய இடத்தில் விசாரணை

ஓய்வு பெற்ற பெண் இன்ஸ்பெக்டர் கொலை மதிமுக மாவட்டச் செயலாளரிடம் போலீஸார் ரகசிய இடத்தில் விசாரணை

லட்சுமி காந்த்

UPDATED: Aug 27, 2024, 1:40:36 PM

காஞ்சிபுரம் மாவட்டம்

காஞ்சிபுரம் காலாண்டார் தெருவை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற பெண் ஆய்வாளர் கஸ்தூரி(62). இவர் 35 வயதிலேயே கணவரை பிரிந்துவிட்டார் இவருக்கு ஒரு மகன். இவர் வெளிமாநிலத்தில் பணி செய்கிறார்.

இவருக்கும், மதிமுக மாவட்டச் செயலாளர் வளையாபதிக்கும் கணவன் மனைவி உறவு இருந்துள்ளது. கஸ்தூரிகுக்கு இடம் வாங்குவது, விற்பதிலும் இவர் உதவியாக இருந்துள்ளார். தனது வீட்டை விற்பதற்கு கஸ்தூரி முயன்றுள்ளார்.

இந்நிலையில் கடந்த 21-ம் தேதி கஸ்தூரி வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் சிவகாஞ்சி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

கொலை

போலீஸார் சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்ததில் கஸ்தூரி கொலை செய்யப்பட்டது போலீஸாருக்கு தெரிய வந்தது.

இதனைத் தொர்ந்து கஸ்தூரியின் மர்ம மரண வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இந்நிலையில் இந்த கொலை தொடர்பாக வளையாபதியை விசாரிக்க முடிவு செய்தனர். இதனைத் தொர்ந்து சென்னையில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி குடும்பத்துடன் வந்த வளையாபதியை கருக்குபேட்டை அருகே மடக்கி போலீஸார் அழைத்துச் சென்றனர்.

மதிமுக மாவட்டச் செயலாளர்

அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக போலீஸாரிடம் கேட்டபோது, இந்தக் கொலை வழக்கில் மதிமுக மாவட்டச் செயலாளர் வளையாபதிக்கு தொடர்பு இருப்பதற்கான முகாந்திரம் இருப்பதாக போலீஸ் தரப்பில் நம்பப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிவில்தான் எதுவும் தெரிய வரும் என்றனர்.

இந்தக் கொலை எதற்காக நடைபெற்றது. இதில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர். மதிமுகவினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.சண்முகத்தை சந்தித்து கைது செய்யப்பட்டது தொடர்பாக முறையிட்டனர்.

Latest Kancheepuram District News

அப்போது வழக்கில் விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணை முடிவில்தான் எதுவும் கூற முடியும் என்றும் அவர்களிடம் கூறியதைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். மதிமுக மாவட்டச் செயலாளர் கொலை வழக்கில் விசாரிக்கப்படுவது காஞ்சிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கஸ்தூரி குடியிருந்த வீட்டை (ஒன்னேகால் கோடி போகும் வீட்டை) 80 லட்சம் ரூபாய்க்கு வளையாபதி கேட்டதாகவும் , மறுத்த கஸ்தூரியை கொனேரிகுப்பம், மற்றும் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்த நபர் என இரண்டு ரவுடிகளை வைத்து மிரட்ட சொன்னதாகவும், மிரட்ட வந்த நபர்கள் தங்க சங்கிலியைப் பறித்துக் கொண்டு கஸ்தூரியை கொலை செய்திருக்கலாம் எனவும் போலீஸ் தரப்பில் தகவல்களாக கூறப்படுகிறது.

திமுக

மதிமுக மாவட்ட செயலாளர் வளையாபதி உள்ளிட்ட இரண்டு பேரை காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகிறார்கள்.

திமுக ஆட்சியில் சமீபத்தில் காவல் துறையில் இருந்து ஓய்வு பெற்ற பெண் காவல் ஆய்வாளரையே கொல்லக் கடிய அளவுக்கு மதிமுக கட்சியை சேர்ந்த மாவட்ட செயலாளர் வளையாபதி என்பவர் அசைன்மென்ட் போட்டது மிகப்பெரும் பதட்டத்தை காஞ்சியில் உண்டாகி உள்ளது என காவல்துறையினர் புலம்புகின்றார்கள்



VIDEOS

Recommended