• முகப்பு
  • விவசாயம்
  • ஆய்வில் கம்பங்கள் துருப்பிடித்து கீழே சரியும் நிலையில் உள்ளதை கண்டு கொள்ளாத ககன்தீப் சிங் பேடி , விவசாயிகள் கேள்வி ?

ஆய்வில் கம்பங்கள் துருப்பிடித்து கீழே சரியும் நிலையில் உள்ளதை கண்டு கொள்ளாத ககன்தீப் சிங் பேடி , விவசாயிகள் கேள்வி ?

லட்சுமி காந்த்

UPDATED: Jul 25, 2024, 5:10:59 AM

காஞ்சிபுரம் மாவட்டம்

உலகில் மரங்கள் நிறைந்த வனப்பகுதி குறைந்து வருவதால் மழைப் பொழிவும் குறைந்து வருகிறது. இதனால் பூமியில் நீர்வளம் குறைந்ததை உணர்ந்த அறிவியலாளர்கள், பூமியின் நிலப்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு வன வளம் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சுற்றுச் சூழல் ஆய்வாளர்கள் மரம் வளர்க்க ஊக்கப்படுத்தி வருகின்றனர்.

இதையடுத்து உலகெங்கும் மரம் நடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. ஆனால் மரக்கன்றுகள் தேவையான அளவு கிடைப்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

இன்றைய காலத்தில் வீடுகளில் அழகு செடிகள், பூச்செடிகள் வைத்துத் தோட்டங்கள் அமைப்பதை அனைவரும் விரும்புகின்றனர். ஆனால் அதற்கான செடிகள் கிடைப்பது அரிதாகவே உள்ளது.

அதிமுக

அதிமுக ஆட்சியில் மரக்கன்றுகள் உருவாக்கும் "நாற்றங்கால் பண்ணைகள்" அதிகமாக உருவாக்கப்பட்டது.

நாற்றங்கால் பண்ணையில் இளம் செடிகள் அல்லது நாற்றுகள் வேறு இடத்தில் நடுவதற்காக வளர்க்கப்படும் . வயலில் ஆரோக்கியமான நாற்றுகளை நடவு செய்வதன் மூலம் சிறந்த அறுவடை மற்றும் நல்ல மகசூல் கிடைக்கும்.

தக்காளி, பிரிஞ்சி, மிளகாய், முட்டைக்கோஸ், காலிஃபிளவர், பாகற்காய் போன்ற சில காய்கறி பயிர்கள் மற்றும் சாமந்தி விதைகள் போன்ற பூ பயிர்கள் அதிகபட்ச முளைப்பு எண்ணிக்கை மற்றும் ஆரோக்கியமான தாவரத்தை உருவாக்க நாற்றங்காலில் "50% நிழல் வலையில் வளர்க்கப்பட்டு", பின்னர் பிரதான வயலுக்கு இடமாற்றம் செய்யப்படும்.

இயற்கை உரம் 

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் கரசங்கால் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் செயல் பட்டு வரும் நாற்றங்கால் பண்ணையில் , மரக்கன்று உற்பத்தி, மண்புழு, இயற்கை உரம் தயாரித்தல் போன்ற பணிகளில் நடைபெற்று வருகிறது. 

அதனை பார்வையிட்டு ஆய்வு செய்ய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செயலாளர், அரசு கூடுதல் தலைமை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை இயக்குனர் பா.பொன்னனையா, காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கூடுதல் இயக்குநர் குமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் வரதராஜன், உள்ளிட்ட பலர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனர்.

நாற்றங்கால் பண்ணை

இதில் என்ன அதிசயம் என்றால் இவ்வளவு உயர் அதிகாரிகள் நாற்றங்கால் பண்ணையை ஆய்வு செய்தனர். சுமார் 45 நிமிடம் சுத்தி சுத்தி வந்தனர் . அவர்கள் கண்களுக்கு "நிழல் வலை அமைப்பு" கம்பங்கள் துருப்பிடித்து உடையும் தருவாயில் உள்ளதை கூட கண்டுகொள்ளாதவர்கள் எப்படி இந்த நாற்றங்கால் பண்ணை வளர்ச்சி திட்டத்தை விரிவுபடுத்துவார்கள் என்ற சந்தேகம் அங்கிருந்த விவசாயிகள் இடையே ஏற்பட்டது. 

அதுமட்டுமல்ல ஜூலை மாதம் இரண்டாம் தேதி நாற்றங்கால் பண்ணையை பார்வையிட்ட காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலை செல்வன் மோகன் கண்களில் கூட இந்த "நிழல் வலை அமைப்பு" கம்பங்கள் துருப்பிடித்து விழும் தருவாயில் உள்ளதை கண்டு கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

VIDEOS

Recommended