பழனி பஸ் நிலையத்தில் பாலூட்டும் தாய்மார்கள் அறை முறையாக பராமரிக்கப்படுமா?

கண்ணன்

UPDATED: Sep 25, 2024, 6:50:27 PM

திண்டுக்கல் மாவட்டம்

பழனி பஸ் நிலையங்களில் உள்ள பாலூட்டும் தாய்மார்கள் அறையை முறையாக பராமரிப்பதோடு, பூட்டிக்கிடக்கும் அறையை திறந்து உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று பெண்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தாய்மார்கள் பாலூட்டும் அறை ஒரு தாய் தனது குழந்தையை எந்தவித நோயும் இன்றி நல்ல ஆரோக்கியத்துடன் வளர்ப்பதற்கு பிறந்த ஒரு வருடத்திற்கு தாய்ப்பால் கொடுப்பது மிகவும் அவசியமாகும்.

பழங்கால பெண்கள் தங்களது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்து ஆரோக்கியத்துடன் வளர்த்து வந்தனர். ஆனால்இன்றைய காலகட்டத்தில் பாலூட்டும் தாய்மார்கள் பணி மற்றும் பயண நிமித்தம் காரணமாக வெளியே செல்லும்போது பஸ் நிலையங்களில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

தங்கள் இருப்பிடத்தில் இருந்து பணிபுரியும் இடத்திற்கோ அல்லது தாங்கள் செல்ல விரும்பும் இடங்களுக்கோ செல்ல சில மணி நேரங்கள் தேவைப்படும். தாங்கள் அணியும் ஆடை மற்றும் பல்வேறு இடையூறுகள் காரணமாக பொது இடத்தில் தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாமல் பெண்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

இ்ந்த நிலையில் பஸ் நிலையங்களில் காத்திருக்கும் வேளையில் தாய்மார்கள் தங்கள் குழந்தைக்கு எந்தவித இடையூறும் இன்றி தனிமையில் வசதியாக பாலூட்டும் வகையில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி பஸ் நிலையங்களில் தாய்மார்கள் பாலூட்டும் அறை திறக்கப்பட்டுஇயங்கி வந்தது.

இந்த அறையில் இருக்கைகள், மின்விசிறி, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது. பஸ் நிலையங்களில் கைக்குழந்தையுடன் வரும் தாய்மார்களுக்கு இது மிக வரப்பிரசாதமாக அமைந்தது.

தற்போது இது பஸ் நிலையங்களில் அமைக்கப்பட்ட தாய்மார்கள் பாலூட்டும் அறைகள் தற்போது பராமரிப்பு இல்லாமல் காணப்படுகிறது.

பழனி பஸ் நிலையத்தில் உள்ள பாலூட்டும் அறை சரியான சுகாதார வசதி இன்றி காணப்படுகிறது. இங்கு குடிநீர் வசதி எதுவும் இல்லை. அதனை தினமும் சுத்தம் செய்து பயன்பாட்டுக்கு விட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தாய்மார்களின் கோரிக்கையாக உள்ளது.

 

VIDEOS

Recommended