காதில் பூ சுற்றி மீன்வளத்துறை இயக்குனர் பிரபாவதியிடம் மீனவர்கள் கோரிக்கை மனு.

கார்மேகம்

UPDATED: Sep 28, 2024, 8:54:38 AM

ராமநாதபுரம் மாவட்டம்

மாதாமாதம் நடைபெறும் மீனவர்கள் குறைதீர்க் கூட்டம் தொடர்ச்சியாக சமீப இரண்டு மாதங்களாக நடத்தப்படவில்லை அது மட்டுமின்றி மீன்வளத்துறை மீது விமர்சனங்கள் வரும் போதெல்லாம் மீனவர் குறைதீர்க் கூட்டம் நடத்தப்படுவதில்லை என்பதையும் சுட்டிக்காட்டி உடனடியாக மீனவர்கள் குறைதீர்க் கூட்டம் தடத்தப்பட வேண்டும்

அது போல் வேதாளை முதல் வாலி நோக்கம் கீழமுந்தல் மேலமுந்தல் மாரியூர் வரையிலான பகுதி முழுவதும் அரசால் தடைசெய்யப்பட்ட சுறுக்கு மடி மீன்பிடிப்பு இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வருவது சம்பந்தமாகவும்

மீனவர்கள்

இதனை தொடர்ந்து இராமேஸ்வரம் பகுதியிலும் இம்மீன்பிடிப்புக்கு ஒரு பகுதியினர் செல்ல தயாரான போது அது குறித்து பொது வெளியில் விவாதம் கிளம்பியதையொட்டி சுறுக்கு மடி மீன்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதை நிரந்தரமாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் 

கீழமுந்தல் கிராமத்தை சேர்ந்த மீனவர் ஒருவர் சமீப ஆறு மாதத்திற்கு முன் உயிரிழந்ததற்கு காரணமான நைட்ரஜன் வாயூ சிலிண்டர்களை பயன்படுத்தி கடலுக்குள் மூழ்கி சங்கு சிங்கி மீன் இவற்றுடன் மீன்களையும் பிடித்து செல்வதன் மூலம் பாரம்பரிய முறையில் வலைகள் பயன்படுத்தி மீன்பிடிப்பு தொழில் செய்வோரின் வாழ்வாதாரம் அழிந்து வருவது குறித்தும் முறையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காதில் பூ  சுற்றி கொண்டு இராமநாதபுரம் மீன்வளத்துறை துணை இயக்குனர் பிரபாவதியிடம் மீனவர்கள் சார்பாக கோரிக்கை மனு அளித்தனர்.

 

VIDEOS

Recommended