ரேஷன் கடையில் 35 கிலோ அரிசிக்கு 30 கிலோ எடை போடும் அவலம்.

சண்முகம்

UPDATED: Jul 23, 2024, 4:44:48 PM

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம்

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பவழங்குடி கிராமத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வரும் நிலையில் ரேஷன் கடையில் தமிழக அரசால் அனைவருக்கும் அரசி பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் வழங்கப்படுவது வழக்கம்

நியாய விலைக் கடையில் நியாயமே இல்லை

இன்று வழக்கம்போல் வீரப்பன் சேல்ஸ்மேன் கடையைத் திறந்து பொருட்களை விநியோகம் செய்து வந்த நிலையில்  வறுமை கோட்டுக்கு கீழ் இருப்பவர்களுக்கு 35 கிலோ வழங்கப்படுவது வழக்கம் இதில் 5 கிலோ எடையை குறைத்து 30 கிலோ பயனாளிகளுக்கு கொடுத்து வந்த நிலையில் சந்தேகம் அடைந்த கிராம மக்கள் மீண்டும் எடை போட சொன்னதால் வீரப்பன் மிகுந்த கோபம் அடைந்த நிலையில் பொதுமக்களை அவதூறாக பேசி வந்ததோடு அவர்களது ஆதரவாளருக்கு மது வாங்கிக் கொடுத்து அனைவரையும் திட்டுவதாகவும்,

Latest Cuddalore News & Live Updates

அதோடு ரேஷன் கடை நூலகத்தில் இயங்கி வருகிறது இதில் எலிகள் தொல்லை அதிகமாக இருப்பதாக பலரும் குற்றம் சாட்சி வருகின்றனர் இதனால் மாவட்ட நிர்வாகம் இவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டு 

அதோடு பாமாயில் மண்ணெண்ணெய் பருப்பு கடந்த மூன்று மாத காலமாக பொதுமக்களுக்கு வழங்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டி வருகின்றனர்.

அறிதனும் அரிதாக சில சலுகைகளை பொதுமக்களுக்கு அரசு வழங்கினாலும் இது போன்ற ஆட்களால் சலுகைகள் முழுமையாக பொது மக்களுக்கு கிடைப்பதில்லை என்பதே கசப்பான உண்மையாகும்.

 

VIDEOS

Recommended