- முகப்பு
- விளையாட்டு
- முதலமைச்சர் கோப்பைகாண சிலம்பம் போட்டியில் சலசலப்பும் குழப்பமும்.
முதலமைச்சர் கோப்பைகாண சிலம்பம் போட்டியில் சலசலப்பும் குழப்பமும்.
JK
UPDATED: Sep 12, 2024, 10:56:49 AM
திருச்சி மாவட்டம்
விளையாட்டு வீரர்கள் இடையே குழப்பம் - அதிகாரிகள் பேச்சு வார்த்தைக்கு பின்னர் போட்டிகள் துவங்கியது.
தமிழக முழுவதும் முதலமைச்சர் கோப்பைகாண போட்டிகள் கடந்த இரண்டு நாளாக நடைபெற்று வருகிறது.
முதலமைச்சர் கோப்பை
இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் தமிழக முதலமைச்சர் கோப்பைக்கான சிலம்பம் போட்டிகள் நடைபெறம் என விளையாட்டுத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதில் கலந்து கொள்ள மாவட்ட முழுவதும் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட சிலம்பம் விளையாட்டு வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
அப்போது அதிகாரிகள் வீரர் வீராங்கனைகள் ஐந்து தேர்வு செய்த போது எடை குறைவாக இருப்பதாக கூறி மாணவ, மாணவிகளை அதிகாரிகள் தகுதி இழப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
சிலம்பம் போட்டி
இதன் காரணமாக விளையாட்டு வீரர் வீராங்கனைகள் மற்றும் அவரது பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் போட்டிகள் நிறுத்தப்பட்டு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து மாவட்ட விளையாட்டு அலுவலர் கண்ணன் மற்றும் கே.கே.நகர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு பெற்றோர்களுடன் பேச்சுவார்த்தையில் நடத்தினர்.
பின்னர் 40கிலோவுக்கு கீழ் இருந்தாலும் அவர்களை விளையாட்டுக்கு அனுமதிக்கலாம் என்ற உத்தரவை விளையாட்டுத்துறை அதிகாரிகள் பிறப்பித்தனர்.
Latest Sports News
இதனை தொடர்ந்து தற்போது போட்டி துவங்கி நடைபெற்று வருகிறது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள 500-க்கும் மேற்பட்ட பள்ளிக்கு மாணவிகள் பங்கேற்கும் தொடு சிலம்பப் போட்டி என்று அறிவிக்கப்பட்டு இருந்தது அறிவிப்பில் எடை குறித்து எந்த ஒரு அறிவிப்பும் சுற்றறிக்கையில் இல்லாததால் இந்த குழப்பம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.