- முகப்பு
- மாவட்டச் செய்தி
- மலைபோல் கொட்டப்பட்ட குப்பைகள் மழைகாலத்தில் நோய் பரவும் அபாயம்.
மலைபோல் கொட்டப்பட்ட குப்பைகள் மழைகாலத்தில் நோய் பரவும் அபாயம்.
S.முருகன்
UPDATED: Oct 20, 2024, 12:18:12 PM
திருவேற்காடு நகராட்சி
கோலடியிலிருந்து பருத்திப்பட்டு செல்லும் சாலையில் உயர் அழுத்த மின்கம்பம் உள்ள இடத்தில் மின்கம்பியை தொடும் அளவிற்கு மலைபோல் கொட்டப்படும் குப்பைகளை அகற்றாமல் நகராட்சி நிர்வாகம் அலட்சியப்படுத்துவதால் சுகாதார சீர்கேடு, நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஊரில் இருக்கும் குப்பையெல்லாம் கொண்டு வந்து நகரின் மையப்பகுதியில் கொட்டுவதால் பணிக்கு செல்பவர்கள், மாணவர்கள் என அனைவரும் மூக்கை மூடிக்கொண்டு செல்ல வேண்டியுள்ளது இதுதொடர்பாக பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.
மலைபோல் கொட்டப்பட்ட குப்பைகள்
இந்த குப்பைகளை செங்கல்பட்டு அருகேயுள்ள வனப்பகுதியில் கொட்ட வேண்டும். ஆனால் அங்கு குப்பையை கொண்டு சென்று நகராட்சி நிர்வாகம் கொட்டுவதில்லை.
இருந்தாலும் 3 லாரிகளில் கொண்டு செல்லப்படுவதாக கணக்கு காட்டப்படுகிறது. எனவே இந்த குப்பைகளை போர்க்கால அடிப்படையில் அகற்ற நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு