• முகப்பு
  • குற்றம்
  • இனிப்பு கடை குடோனில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள்.

இனிப்பு கடை குடோனில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள்.

ரமேஷ்

UPDATED: Sep 25, 2024, 12:15:28 PM

கும்பகோணம்

மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவின் பேரில் கும்பகோணம், திருவிடைமருதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா விற்பனை செய்யப்படுகிறதா என காலை முதல் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

இந்நிலையில் மேம்பாலம் அருகில் உள்ள இனிப்பு கடையில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

District News & Updates in Tamil

அதன் பேரில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் சசிகுமார், முத்தையன் மற்றும் கோட்டை கலால் அலுவலர் அருள்மணி, நாச்சியார் கோவில் காவல் ஆய்வாளர்கள் ராஜேஷ், கரிகால சோழன் ஆகியோர் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். 

அப்போது, கடையின் மாடியில் உள்ள குடோனில் சோதனை செய்தபோது அங்கு அனைத்து வகையான குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Latest District News in Tamil

அதில் ரூ.3 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்து நாச்சியார் கோவில் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும் கடையை பூட்டி சீல் வைத்தனர். 

இதுதொடர்பாக நாச்சியார் கோவில் காவல்துறையினர் கடை உரிமையாளர் கார்த்திகேயனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

VIDEOS

Recommended