பறிபோகிறதா நாகர்கோவில் மாநகராட்சி மேயர் பதவி ?

முகேஷ்

UPDATED: Oct 21, 2024, 8:30:12 AM

நாகர்கோவில்

தூய்மை பணியாளர்களை தாக்கிய புகாரில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் அவர்களையும் புகார் தாரரான 5 வது வார்டு மாமன்ற உறுப்பினர் S. V உதயகுமார் மற்றும் தாக்குதலுக்கு உள்ளான மூன்று தூய்மை பணியாளர்களையும் விசாரிக்க விசாரணை அதிகாரியாக அரசு நியமித்த தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் நாளை வருகை.

மேயராக தனது நிர்வாகத்தின் கீழ் இயங்கும் நாகர்கோவில் மாநகராட்சியில் விசாரணை அதிகாரி முன் நாளை 21-10-2024 விசாரணைக்காக ஆஜராகிறார் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ்.

மேயர்

உச்சகட்ட பரபரப்பில் மாநகராட்சி அலுவலகம்.

தூய்மை பணியாளரை தாக்கிய புகாருக்கு மேயர் விசாரணைக்கு உள்ளாகிறார் என்றால், தரமில்லாத பணிகளை செய்ய உடந்தையாக இருக்கும் மாநகராட்சி பொறியாளர் மற்றும் அலுவலர்களின் நிலையும் இதே போல் விசாரணைக்கு உள்ளாக்கப்படுவார்களா ?

தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே மாநகர மக்களின் எதிர்பார்ப்பு, தப்புமா மேயர் பதவி ? பொறுத்திருந்து பார்ப்போம்.

 

VIDEOS

RELATED NEWS

Recommended