தேனியில் கஞ்சா விற்பனை செய்த 3 பேர் ஆந்திராவில் கைது.
ராஜா
UPDATED: Aug 16, 2024, 10:50:43 AM
தேனி
தேனி மாவட்டத்திற்கு கஞ்சா விற்பனை செய்து சிவக்குமார், மல்லேஸ்வர் ராவ், விஜயபாபு உள்ளிட்ட 3 கஞ்சா வியாபாரிகள் ஆந்திர மாநிலத்தில் கைது செய்து அவர்களிடம் 23 கிலோ கஞ்சா கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி வந்து சிறு வியாபாரிகளுக்கு விற்பனை செய்ய வந்த போது 21.6 கிலோ பிடிபட்டது.
அப்போது நிரஞ்சன, சரவணக்குமார் மகாலட்சுமி, ஈஸ்வரி ஆகிய நான்கு பேர் ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு கஞ்சா வாங்கி தேனி, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதி சேத்தூர் சிறுவியாபாரிகளுக்கு விற்க திட்டமிட்டிருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது.
கஞ்சா
இதனை தொடர்ந்து தேனி மாவட்டத்திற்கு கஞ்சா கொண்டு வந்த வழக்கை முழுமையாக சார்பு ஆய்வாளர் கதிரேசன் தலைமையில் ஒரு தனிப்படை அமைக்கபட்டது.
ஊர் பெயர் விவரம் தெரியாத குற்றவாளியைப் பிடிக்க ஆந்திர பிரதேச மாநிலம் விஜயநகரத்திற்கு தனிப்படை அனுப்பி வைக்கப்பட்டது.
விஜயநகரத்தில் 2 வாரங்கள் தங்கி இருந்து உள்ளுர் காவல் அதிகாரிகளின் உதவியோடு அத்தனிப்படை கஞ்சா மொத்த விற்பனையாளர்களைக் கண்டுபிடித்தது குற்றவாளி சிவக்குமார், மல்லேஸ்வர் ராவ், விஜயபாபு உள்ளிட்ட மூன்று பேரை தனிப்படையினர் கைது செய்தனர்.
தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களுக்கு கஞ்சா மொத்த விற்பனை செய்து வந்த அந்த மூன்று குற்றவாளிகளையும் கைது செய்த தனிப்படை 23 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்த காரையும் பறிமுதல் செய்தனர்.
Latest Crime News
இந்த வழக்கில் கஞ்சா விற்பனை செய்த 9 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இருந்து செயல்படும் கஞ்சா மொத்த விற்பனையாளர்கள் தப்பித்து விடக் கூடாது என்பதற்காக வணிக ரீதியிலான பெருமளவு கஞ்சா பறிமுதல் செய்யப்படும் வழக்குகளில், மொத்த குற்ற வாளிகள் சங்கிலித் தொடர் ஆய்வு நடந்து வருகிறது.
கடந்த இரண்டு மாதங்களில் மூன்றாவது அதிரடி நடவடிக்கை 9 குற்றவாளிகளில் மொத்தம் 7 குற்றவாளிகளின் வங்கிக் கணக்குகள் முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.