- முகப்பு
- மாவட்டச் செய்தி
- விருதுநகர் குகன்பாறையில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடித்து பயங்கர விபத்து.
விருதுநகர் குகன்பாறையில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடித்து பயங்கர விபத்து.
அந்தோணி ராஜ்
UPDATED: Sep 19, 2024, 9:07:24 AM
Virudhunagar District
சாத்தூர் அருகே குகன்பாறையில் சிவகாசியை சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான நாக்பூர் உரிமம் பெற்ற லட்சுமி பட்டாசு ஆலையில் வழக்கம் போல் பட்டாசு ரசாயன மூலப்பொருள் கலவை செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது எதிர்பாராத விதமாக ரசாயன மூலப்பொருட்களில் ஏற்பட்ட உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது.
இதில் பணி செய்து கொண்டிருந்த அறை தரைமட்டமானது.
Breaking News Today in Tamil
மேலும் பணியில் இருந்த குருமூர்த்தி பாண்டியன் 19 என்ற தொழிலாளி 90 சதவீத தீக்காயத்துடன் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் ரசாயன பொருட்களை இறக்கி வைக்க சென்ற ஆட்டோ ஓட்டுநர் கோவிந்தராஜ் 24, என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தீயணைப்புத் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏழாயிரம் பண்ணை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு