• முகப்பு
  • சென்னை
  • சுடுகாட்டில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்த பிரபல ரவுடி.

சுடுகாட்டில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்த பிரபல ரவுடி.

ஆனந்த்

UPDATED: Sep 6, 2024, 7:27:04 PM

சென்னை

மாங்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக அந்த தகவலையடுத்து மாங்காடு காவல் ஆய்வாளர் முத்துராமலிங்கம் தலைமையில் தீவிரமாக கண்காணித்து வந்தனர் .

இந்த நிலையில் மாங்காடு, அண்ணா தெருவில் உள்ள சுடுகாட்டில் வைத்து கஞ்சா விற்பனை செய்து வந்த போரூர், காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த அப்பாஸ்(என்ற) பட்டாஸ்(25), இவர் பிரபல ரவுடி என்பதும் சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பது தெரியவந்தது.

கஞ்சா

மேலும் கூட்டாளியான மாங்காட்டை சேர்ந்த இளங்கோவன்(38), என ஆகிய இரண்டு பேரை கைது செய்து இவர்களிடம் இருந்து 1 1/2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர் 

இவர்கள் கஞ்சாவை வாங்கி வந்து அதே பகுதியில் உள்ள சுடுகாட்டில் வைத்து கஞ்சாவை கல்லூரி மாணவர்கள் உட்பட பலருக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என விசாரித்து வருகின்றனர்.

 

VIDEOS

Recommended