• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • ராமேஸ்வரம் மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றத்தில் அபராதம் செலுத்தப்பட்டு சிறையில் இருந்து விடுவிப்பு.

ராமேஸ்வரம் மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றத்தில் அபராதம் செலுத்தப்பட்டு சிறையில் இருந்து விடுவிப்பு.

கார்மேகம்

UPDATED: Sep 11, 2024, 5:32:21 AM

இராமநாதபுரம்

ராமநாதபுரம் எம்.எல்.ஏ. காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் அளித்த நிதியில் 5 ராமேஸ்வரம் மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றத்தில் அபராதம் செலுத்தப்பட்டது இதையடுத்து 5 மீனவர்களும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர் 

( மீனவர்கள் சிறைப்பிடிப்பு)

ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த மாதம் 26- ந்தேதி விசைப்படகு ஒன்றில் 8 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர் இந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தனர்

இந்த நிலையில் 8 பேரும் கடந்த 5- ந் தேதி  அன்று மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர் அப்போது. மெக்கான்ஸ், சசிகுமார், மாரியப்பன் ஆகிய 3 மீனவர்களுக்கும் 2- வது முறையாக மீன்பிடித்ததாக கூறி 6- மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

அபராதம்

மீதமுள்ள 5- மீனவர்களும் நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்ட போதும் இலங்கை பணம் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது அபராதம் கட்ட தவறினால் 6- மாதம் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்

அபராதம் கட்டாததால் இந்த 5- மீனவர்களும் மீண்டும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

( மீனவர்கள் விடுதலை)

இதுபற்றி மீனவர்களின் குடும்பத்தினர் மீனவ சங்க தலைவர் சேசுராஜா தலைமையில் ராமநாதபுரம் எம்.எல்.ஏ.  காதர் பாட்ஷா முத்துராமலிங்கத்தை நேரில் சந்தித்திது கோரிக்கை விடுத்தனர்

இது தொடர்பாக காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தனது சொந்த இந்திய பணம் ரூ.1. லட்சத்து 25 ஆயிரத்தை கொடுத்து இலங்கை நீதிமன்றத்தில் கட்டுவதற்காக மீனவர்களிடம் வழங்கினார்

தொடர்ந்து மீனவ சங்கத்தலைவர் சேசுராஜா மூலம் அந்த பணமானது இலங்கை மன்னார் நீதிமன்றத்தில் மீனவர்கள் சார்பாக கட்டப்பட்டது.

காதர் பாட்ஷா முத்துராமலிங்கம்

இதனால் ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேரும் விடுவிக்கப்பட்டு மெரிகானா முகாமில் தங்க வைக்கப்பட்டனர்

விரைவில் விமானம் மூலம் இவர்கள் தமிழகம் அழைத்து வரப்படுவார்கள் என்று கூறப்படுகின்றது

மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்த ராமநாதபுரம் எம்.எல்.ஏ. காதர் பாட்ஷா முத்துராமலிங்கத்திற்கு விடுவிக்கப்பட்ட மீனவர்கள் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.

 

VIDEOS

Recommended