• முகப்பு
  • விளையாட்டு
  • கூடோ விளையாட்டுப் போட்டியை தமிழகத்தில் அங்கீகாரம் வழங்கி மற்ற மாநிலங்களில் வழங்குவது போல் சலுகைகளை வழங்க கோரிக்கை.

கூடோ விளையாட்டுப் போட்டியை தமிழகத்தில் அங்கீகாரம் வழங்கி மற்ற மாநிலங்களில் வழங்குவது போல் சலுகைகளை வழங்க கோரிக்கை.

JK

UPDATED: Nov 13, 2024, 11:57:07 AM

திருச்சி

கூடோ விளையாட்டுப் போட்டியை தமிழகத்தில் அங்கீகாரம் வழங்கி மற்ற மாநிலங்களில் வழங்குவது போல் சலுகைகளை வழங்க வேண்டும் - தமிழக பயிற்சியாளர் கந்தமூர்த்தி பேட்டி

44 பதக்கங்களுடன் வீரர்கள் தமிழகம் திரும்பினர் - வீரர்களுக்கு திருச்சி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு

குஜராத் மாநிலம் சூரத்தில் கடந்த 5ம் தேதி முதல் 12ம்தேதி வரை 15 வது தேசிய கூடோ போட்டிகள், 5வது தேசிய கூடோ பெடரேஷன் கப், 16 வது அக்ஷய்குமார் இண்டர்நேஷனல் கூடோ ஆகிய மூன்று போட்டிகள் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு, கர்நாடகம், டெல்லி, அந்தமான்நிக்கோபார், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம், ஒரிசா,  கோவா உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து 2000க்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்றனர்.

கூடோ

தமிழகத்தில் திருச்சி, நாமக்கல், சென்னை, சேலம், தர்மபுரி, காஞ்சிபுரம், கோயமுத்தூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் தமிழக தலைமை பயிற்சியாளர் கந்தமூர்த்தி, ஈரோடு மாவட்டம் பயிற்சியாளர் சுரேஷ் மற்றும் பிராங்கிளின்பென்னி, திமேத்தேயு, சரவணன். தமிழரசன், இலக்கியா, பிரேம் ஆகியோர் தலைமையில் பங்கேற்றனர்.

நடைபெற்ற போட்டிகளில் தமிழகத்தை சேர்ந்த வீரர்கள் இரண்டு தங்கபதக்கம், 11வெள்ளி பதக்கம் மற்றும் 31வெண்கல பதக்கம் என 44பதக்கங்களை வென்றனர்.

வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகள் இன்று திருச்சி ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தனர்.

அவர்களை ரயில்வே பாதுகாப்பு படை உதவியாளர் ஆய்வாளர் மாசிலாமணி, மற்றும் பாதுகாப்பு படையினர் சுதாகர், வித்யாதரன், அனுமோல்ஆபிரகாம் ஆகியோர் பொன்னாடை, சந்தனமாலை அணிவித்து வாழ்த்துதலையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

விளையாட்டு துறை

மேலும், வீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக கூடோ விளையாட்டு தலைமை பயிற்சியாளர் கந்தமூர்த்தி

தமிழகத்தில் விளையாட்டு துறையை மேம்படுத்தும் வகையில் செயல்பட்டு வரும் தமிழக முதல்வர், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கூடோ போட்டியை தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் அங்கீகாரம் வழங்கி மற்ற மாநிலங்களான ராஜஸ்தான் அருணாச்சலபிரதேசம், ஆந்திர,

மத்திய பிரதேசம், கோவா போல அங்கீகாரம் மற்ற விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு வழங்கும் சலுகைகளை கூடோ விளையாட்டு வீரர்களுக்கு வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

 

VIDEOS

Recommended