• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனையில் , குழந்தைகளுக்கான புற்றுநோய் சிகிச்சை கண்டறிவதில்லை நோயாளிகள் புலம்பல்.

அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனையில் , குழந்தைகளுக்கான புற்றுநோய் சிகிச்சை கண்டறிவதில்லை நோயாளிகள் புலம்பல்.

லக்ஷ்மி காந்த்

UPDATED: Aug 28, 2024, 7:14:47 PM

அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனை

தற்போது உள்ள அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனையில் , குழந்தைகளுக்கான புற்றுநோய் சிகிச்சை கண்டறிவதில்லை. அதேபோல், ரத்த புற்றுநோய்க்கான எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைகளும் இது நாள் வரையில் இல்லை என நோயாளிகள் புலம்புகின்றார்கள்.

அவ்வப்போது ஸ்கேன் எடுப்பதற்காக இங்கிருந்து காஞ்சிபுரம் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்புகிறார்கள். அங்கு சென்று வந்தால் எங்களுக்கு அரை நாள் வீணாகுகின்றது. இவ்வளவு பெரிய மருத்துவமனையில் ஸ்கேன் எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டையும் நோயாளிகள் வைக்கின்றனர். 

புற்றுநோய்

அதேபோல் இங்கு வருகின்ற சில நோயாளிகளை, இந்திரா நகர் பகுதியில் உள்ள மாமல்லன் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிப்பதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது. 

தற்போது உள்ள அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனையில், போதிய இடவசதியில்லாததால், மருத்துவமனைக்கு அருகே, நான்கு அடுக்கு கொண்ட புதிய மருத்துவமனை 220 கோடி ரூபாயில் 750 படுக்கை வசதியுடன் கட்டப்பட்டு வருகிறது.

Latest District News 

கட்டுமான பணி 75% பூர்த்தியாகிவிட்டது என கூறப்படுகிறது 4 மாடி கட்டிடம் கட்ட 100 கோடி ரூபாய் மதிப்பீடு என நிதி ஒதுக்கப்பட்டு அது தற்போது 220 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

VIDEOS

Recommended