• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • இராஜபாளையம் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை பயன்படுத்தி "தமிழகத்திற்கு ஆபத்து" என விஷமப் பிரச்சாரம்.

இராஜபாளையம் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை பயன்படுத்தி "தமிழகத்திற்கு ஆபத்து" என விஷமப் பிரச்சாரம்.

அந்தோணி ராஜ்

UPDATED: Sep 8, 2024, 8:17:42 AM

விருதுநகர் மாவட்டம்

இராஜபாளையம் இந்து முன்னணி விநாயகர் ஊர்வலத்தை பயன்படுத்தி தமிழகத்திற்கு ஆபத்து என்றும் குடும்ப கட்டுப்பாடு ஒரு மதத்திற்கு மட்டும் கட்டாயமாக்கப்படுவதாகவும் உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பும் விதமாக வைக்கப்பட்டுள்ள பேனர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இராஜபாளையத்தில் 9 ஆம் தேதி திங்கள்கிழமை நாளை இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற உள்ளது.

இந்த ஊர்வலத்தில் நகர் முழுவதும் வைக்கப்பட்டு பூஜித்து வரும் 31 விநாயகர் சிலைகளும் பஞ்சு மார்க்கெட்டில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள கருங்குளம் கண்மாயில் கரைக்கப்படுகிறது. 

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்

இந்நிலையில் இந்த ஊர்வலத்தை பயன்படுத்தி "தமிழகத்திற்கு ஆபத்து" வந்திருப்பதாகவும் "இந்து மதத்தினருக்கு மட்டும் குடும்ப கட்டுப்பாடு கட்டாயமாக உள்ளது" என்பன உள்ளிட்ட உண்மைக்கு புறம்பான மாநிலத்தில் அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் பிற மதத்தினரை புண்படுத்தும் வகையிலும் வாசகங்கள் இடம் பெற்றிருக்கும் பதாகைகள் இந்து ஆட்டோ முன்னணி என்கிற பெயரில் வைக்கப்பட்டுள்ளன. 

இந்தப்பதாகைகள் அனைத்தும் பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளான பழைய பேருந்து நிலையம், இரயில்வே நிலையம், பொன்விழா மைதானம் உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட்டிருப்பதால் இதனை பார்க்கும் பொதுமக்கள் முகம் சுளித்து செல்கின்றனர். 

இந்து முன்னணி

மேலும் இந்து மதத்தை அவமானப்படுத்தியும் தமிழகத்தில் சட்ட ஒழங்கை சீர்குலைக்க முயற்சி செய்யும் வகையிலும் வைக்கப்பட்டிருக்கும் பேனர்களால் பிற மதத்தினர் புண்படுவது மட்டுமில்லாமல் "தமிழகத்திற்கு ஆபத்து " என்ற வார்த்தை அனைவருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஆகையால் காவல்துறையினர் உண்மைக்கு புறம்பான வாசகங்கள் இடம் பெற்றிருக்கும் பேனர்களை அந்தந்த இடங்களில் இருந்து அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

VIDEOS

Recommended