- முகப்பு
- மாவட்டச் செய்தி
- புவனகிரியில் காலை 11 மணி அளவில் கடை அடைப்பு போராட்டம்.
புவனகிரியில் காலை 11 மணி அளவில் கடை அடைப்பு போராட்டம்.
சண்முகம்
UPDATED: Aug 13, 2024, 9:43:11 AM
கடலூர் மாவட்டம் சிதம்பரம்
மற்றும் புவனகிரியில் காலை 11 மணி அளவில் கடை அடைப்பு போராட்டம் வர்த்தக சங்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது
இதன் எதிரொலியாக சிதம்பரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன மெடிக்கல் மற்றும் பழ வகைகள் டீக்கடைகள் மட்டும் கடைகள் திறந்து இருந்தன மற்றபடி அனைத்து வணிக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன
தமிழக அரசு கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டாததை கண்டித்து வர்த்தக சங்கத்தின் சார்பில் கடை அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
கொள்ளிடம் | வெள்ளாற்று
கொள்ளிடம் மற்றும் வெள்ளாற்றில் கதவணை அமைக்கக் கோரி சிதம்பரம் பகுதியில் கடையடைப்பு கொள்ளிடம் ஆற்றில் கடலூர் மாவட்டம் கருப்பூர்- மயிலாடுதுறை மாவட்டம் மாதிரவேளூர் இடையே கதவணை அமைக்க ஆய்வுகள் மேற்கொண்டு மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்ட நிலையில் கதவணை அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ள தமிழக அரசின் முடிவினை மறுபரிசீலனை செய்யக் கோரியும்,
கடலூர் மாவட்டம், புவனகிரி அருகிலுள்ள வெள்ளாற்றில், ஆதிவராகநல்லூரில் தடுப்பணை கட்டும் திட்டத்தை உடன் செயல்படுத்த கோரியும், அடையாள கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
குறிப்பு கர்நாடகத்தில் பெய்த கன மழையின் காரணமாக சுமார் 2 லட்சம் கன அடி தண்ணீர் கடலில் கலந்தது இதை கண்டித்து கடை அடைப்பு போராட்டம் வர்த்தக சங்கத்தின் சார்பில் நடைபெறுகிறது
கொள்ளிடத்தில் ஆங்காங்கே தடுப்பணை கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.