ஒரு வாரத்திற்குள் கொலையாளியை கண்டுபிடித்த கள்ளக்குறிச்சி காவல்துறையினர் உண்மை குற்றவாளியின் முகத்தை மறைப்பது ஏன் ?
கோபிநாத் பிரசாந்த்
UPDATED: Nov 9, 2024, 10:58:03 AM
கள்ளக்குறிச்சி மாவட்டம்
கடந்த 03.11.2024-ந் தேதி வடபொன்பரப்பி கால்நடை மருத்துவமனை அருகே உள்ள ராவுத்தநல்லூர் காப்புகாட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், இராயசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த பிச்சைக்காரன் மகன் வெங்கடேசன்(40) என்பவர் கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் இறந்து கிடப்பதாக வெங்கடேசனின் மனைவி கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் வடபொன்பரப்பி காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கொலை வழக்கு
இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி சம்பவ இடம் சென்று பார்வையிட்டு குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய திருக்கோவிலூர் காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் மேற்பார்வையில் சங்கராபுரம் வட்ட காவல் ஆய்வாளர் விநாயகமுருகன், உதவி ஆய்வாளர்கள் திருமால், ஏழுமலை, தனசேகர் மற்றும் லோகேஸ்வரன் ஆகியோர் தலைமையில் 5 தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.
அதன்படி தனிப்படை காவல்துறையினர் சம்பவயிடம் சென்று தடயங்கள் மற்றும் அருகில் உள்ள CCTV -பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
Latest Crime News In Tamil
அப்போது சம்பவத்தன்று வெங்கடேசனுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற அவரது நண்பரான பிரம்மகுண்டம் கிராமத்தைச் சேர்ந்த தனபால் மகன் தமிழ் , முனியப்பன் தமிழ்செல்வன்(27) என்பவரிடம் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்த வந்தனர்.
அவரை காவல் நிலையம் அழைத்து சென்று தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் சம்பவத்தன்று வடபொன்பரப்பி கால்நடை மருத்துவமனை அருகே வெங்கடேசனை மது அருந்த வைத்து அவரை கத்தியால் குத்தி கொலை செய்து அவர் அணிந்திருந்த 8 கிராம் தங்க செயினை பறித்துச் சென்றது தெரியவந்தது.
அதை தொடர்ந்து தமிழ்செல்வனை கைது செய்து அவரிடமிருந்து தங்க செயினை பறிமுதல் செய்த பின் குற்றவாளி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.
உண்மை குற்றவாளியின் முகத்தை மறைப்பது ஏன் என்று தான் புரியவில்லை.