கவரப்பேட்டை அருகே சரக்கு ரயில் மீது எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் மோதி விபத்து.

சுரேஷ் பாபு

UPDATED: Oct 12, 2024, 5:17:39 AM

திருவள்ளூர் மாவட்டம் 

கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து சென்னை பெரம்பூர் வழியாக பீகார் மாநிலம் தர்பாங்கா பகுதிக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் நின்றிருந்த சரக்கு ரயில் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

6 பெட்டிகள் தடம்புரண்ட நிலையில் இரண்டு பெட்டிகள் எரிய தொடங்கின  பயணிகள் ரயிலில் இரண்டு பெட்டிகள் தீ பற்றி எரிந்த நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ரயில்வே துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் தீயணைப்புத் துறையினர் என பலரும் விரைந்து வந்து தீயை அணைத்து விபத்தில் சிக்கிய பொதுமக்களை மீட்டு வருகின்றனர்.

ரயில் விபத்து காரணமாக சென்னை விஜயவாடா மார்க்கத்தில் ரயில்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. 

கும்மிடிப்பூண்டி மார்க்கம் வழியாக செல்லக்கூடிய அனைத்து ரயில்களும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளன 

விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க உடனடியாக மீட்டு சென்னை ஓமந்தூரார் ஸ்டான்லி ராஜு அரசு மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க தயார் நிலையில் வைத்திருக்க முதலமைச்சர் உத்தரவு

ரயில் விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்க 25 ஆம்புலன்ஸ் விரைந்துள்ளன இதுவரை ரயில் விபத்தில் ஐந்து பேர் காயம் அடைந்துள்ளன 

ரயில் விபத்து காரணமாக கும்மிடிப்பூண்டி சென்னை மார்க்கம் அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டுள்ளன 

அமைச்சர் நாசர் மாவட்ட ஆட்சியர் சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன 

விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க 25 ஆம்புலன்ஸ் வந்திருக்கின்றன. 

தலைமைச் செயலாளர் முருகானந்தம் அவர்கள் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்து கொண்டிருக்கிறார். 

தொடர்ந்து ரயில்வே ஊழியர்கள் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன 

சென்னை விஜயவாடா மார்க்கத்தில் ரயில்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன

 

VIDEOS

Recommended