- முகப்பு
- மாவட்டச் செய்தி
- சவுக்குசங்கர், பெரம்பலூர் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்
சவுக்குசங்கர், பெரம்பலூர் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்
மாரியப்பன்
UPDATED: Aug 2, 2024, 10:32:10 AM
பெரம்பலூர் மாவட்டம்
தமிழகப் பெண் போலீசார் குறித்து அவதூராக, யூடியூப் சேனலில் பேசிய சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் செந்தமிழ்செல்வி என்பவர் O6-05-2024 அன்று கொடுத்த புகார் புகாரின் பேரில், பெரம்பலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார், U/s 67 IT Act & 294(b), 353, 509 IPC r/w 4 of TNPWH Act 2002 ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
Perambalur News Tamil Today
இந்நிலையில் இந்த வழக்கில் ஆஜர் செய்வதற்காக சென்னை இருந்த சவுக்குசங்கரை அழைத்து வந்த பெரம்பலூர் மாவட்ட போலீசார், பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி பர்வத்ராஜ் ஆறுமுகம் முன்னிலையில் ஆஜர் படுத்தினர்.
அப்போது சவுக்கு சங்கரின் வழக்கறிஞர்கள் ஒரே பிரச்சனைக்காக தமிழகம் முழுவதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா போலீசாரின், நீதிமன்ற காவலை நிராகரிக்க வேண்டுமென வாதிட்டனர்.
Perambalur News Today Tamil
இதனை அடுத்து நீதிபதி சவுக்கு சங்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் ரொக்கம் செலுத்தி சொந்த ஜாமீன் வழங்கியும் அழைக்கும் போது நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமெனவும் உத்தரவிட்டார்.
இதனை அடுத்து சவுக்கு சங்கரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் சென்னை புழல் சிறைக்கு அழைத்து சென்றனர்.