- முகப்பு
- மாவட்டச் செய்தி
- பழவேற்காடு மீனவர்கள் தமிழ்நாடு அரசை கண்டித்து கோட்டையை நோக்கி பேரணி செல்வதாக தீர்மானம்.
பழவேற்காடு மீனவர்கள் தமிழ்நாடு அரசை கண்டித்து கோட்டையை நோக்கி பேரணி செல்வதாக தீர்மானம்.
L.குமார்
UPDATED: Aug 14, 2024, 6:46:13 PM
திருவள்ளூர் மாவட்டம்
பழவேற்காட்டில் கடந்த ஆகஸ்ட் 5 ம் தேதி அன்று கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது விழுப்புரம் மாவட்ட அதிவேக விசைப்படகு மீனவர்களுக்கும் பழவேற்காடு மீனவர்களுக்கும் ஏற்பட்ட பிரச்சினையில் பழவேற்காடு மீனவர்கள் தாக்கப்பட்டனர்.
இதில் இருவர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து பழவேற்காடு மீனவர்கள் ஆகஸ்ட் 5ஆம் தேதி பழவேற்காடு பகுதியில் பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் திருவள்ளூர் மாவட்ட இணை இயக்குனர் சந்திரா மற்றும் ஆவடி காவல் ஆணையரக காவல் துறையினர் பொதுமக்களிடம் இது குறித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அளித்த உறுதியின் பேரில் மீனவர்கள் அன்று போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்
Latest Thiruvallur District News
ஆனால் அதன்பின்பும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத பட்சத்தில் இதுகுறித்து ஒரு நிரந்தர தீர்வு எட்டப்படாத நிலையில் இன்று திருவள்ளூர், சென்னை, ஆந்திரா மீனவ கிராம நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் பழவேற்காடு அருகே உள்ள ஆண்டார் மடம் பேரிடர் பல்நோக்கு மையத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சென்னை காசிமேடு முதல் ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் வரை உள்ள மீனவ கிராம நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பழவேற்காடு மீனவர்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தனர்.
பழவேற்காடு மீனவர்கள்
மேலும் இது போன்ற சம்பவம் இனிமேல் நடக்காதவாறு என்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் சட்ட ரீதியாகவும், மீனவ சமுதாய ரீதியாகவும் எவ்வாறு நடவடிக்கை மேற்கொள்வது என்பது குறித்தும் ஆலோசனை நடத்தினர்.
கூட்டத்தின் முடிவில் அதிவேக விசைப்படகினை முற்றிலும் தடை செய்ய வேண்டும், தாக்குதலுக்கு ஆளான மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், ஒவ்வொரு மாவட்டத்திற்கு உட்பட்ட மீனவர்கள் அந்தந்த மாவட்ட எல்லைகளுக்குள் மீன் பிடிக்க வேண்டும்,
News
சரியான நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் இதே நிலை தொடர்ந்தால் சென்னை காசிமேடு முதல் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் வரையிலான அனைத்து மீனவர்களும் ஒன்று சேர்ந்து தமிழ்நாடு அரசை கண்டித்து கோட்டையை நோக்கி பேரணி செல்வதாக தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.