ராஜபாளையம் அருகே கணிம வளத்துறையின் அலட்சியம்.

அந்தோணி ராஜ்

UPDATED: Jul 20, 2024, 7:13:20 PM

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் 

அருகே சேத்தூரில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவு கொண்ட வாழவந்தால் கண்மாய் உள்ளது. 

இக்கண்மாயை தூர்வாரும் வகையிலும் கண்மாயில் உள்ள வண்டல் மண் விவசாயத்திற்காக பயன்படுத்தும் வகையிலும் விவசாயிகளுக்கு கணிம வளத்துறை மற்றும் வருவாய்துறை சார்பில் வண்டல் எடுப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டு அதற்கான இலவச அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

கணிம வளத்துறை அலட்சியம்

இந்நிலையில் கணிம வளத்துறை அதிகாரிகளின் அலட்சிய போக்கால் பெரும்பாலானோர் கண்மாயிலிருந்து வண்டல் மண்னை எடுத்து வியாபார நோக்கில் சட்டவிரோதமாக செங்கல் சூளைகளுக்கு விற்பனை செய்து வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Latest and Breaking Virudhunagar News

மேலும் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக மண் எடுத்து வருவதால் இயற்கை வளம் பாதிக்கும் நிலை ஏற்படுவதாகவும், இதுகுறித்து சம்மந்த பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர். 

மாவட்ட நிர்வாகம் இப்பகுதியில் உரிய ஆய்வு நடத்தி சட்ட விரோதமாக மண் விற்பனை நடப்பதை தடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

VIDEOS

Recommended