ஃபாஸ்ட் புட் உணவகத்தில் போதை வஸ்துக்கள் விற்பனை.

லட்சுமி காந்த்

UPDATED: Sep 1, 2024, 7:06:06 AM

திமுக

திமுக அரசு ஆட்சி அமைத்த நாள் முதல்  தமிழகத்தின் மூளை முடுக்கெல்லாம் போதை கலாச்சாரம் வேரூன்றி வருகின்றது.

இதில் தொழிலாளர்கள் மட்டுமின்றி கல்லூரி மாணவ மாணவிகளும் பள்ளி மாணவ மாணவிகளும் போதைக்கு அடிமையாகும் சூழ்நிலையை சமூக விரோத கும்பல் திறம்பட செய்து வருகின்றனர்.

இதை கட்டுப்படுத்த தமிழக அரசு எந்த விதமான உறுதியான நடவடிக்கைகள் எடுக்கவில்லை. அந்தந்த பகுதியில் உள்ள காவல் நிலையங்களும் இதை கண்டு கொள்ளவில்லை.

போதை பொருட்கள்

அதனால் போதை பொருட்கள் பல ரூபங்களில் உருவெடுத்து அனைத்து கடைகளிலும் விற்பனை செய்யும் அளவுக்கு வளர்ச்சி பெற்று உள்ளது.

தற்போது அனைத்து பகுதிகளிலும் மாவா என்ற போதைப்பொருள் விற்பனை அதிகரித்து வருகின்றது. ஜர்தா ,வெற்றிலை ,சுண்ணாம்பு போன்ற பொருட்களால் செய்யப்படும் மாவா வை தொடர்ந்து சாப்பிடும் போது அந்த போதைக்கு அடிமையாகுபவர்களின் உயிருக்கேகூட ஆபத்து விளைவிக்கும் என கூறப்படுகின்ற நிலையில்,

காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் காவல் எல்லைக்கு உட்பட்ட உள்ளாவூர் ஊராட்சியில் ரயில்வே நிலையம் அருகே மகேந்திரன் என்பவர் ஃபாஸ்ட் ஃபுட் உணவகம் மற்றும் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.

Latest Crime News

காஞ்சிபுரம் செங்கல்பட்டு நெடுஞ்சாலையில் உள்ள இந்த கடையில் ரயிலுக்கு போகின்ற கூலி தொழிலாளர்களும் கனரக வாகன ஓட்டுநர்களும் , பள்ளி மாணவர்களும் அடிக்கடி வந்து போவதை கண்காணித்த காவல்துறையினர் நேற்று திடீரென கடையில் சோதனை செய்தபோது ,

அவர் கடையில் மறைத்து வைத்து விற்பனை செய்யப்பட்டு வந்த மாவா என்ற போதை பொருள் 142 பாக்கெட்டுகளும், ஹான்ஸ் குட்கா உள்ளிட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டது. தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்ற குற்றத்திற்காக மகேந்திரன் மீது நான்கு பிரிவின் கீழ் வழக்குகள் பதிவு செய்து சிறைக்கு அனுப்பப்பட்டார் . மேலும் அந்த உணவகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

பள்ளிகள் முன், போதை கலந்த சாக்லேட் விற்பனை, சிறு கடைகளில் குட்கா, புகையிலை பாக்குடன் சேர்ந்த, 'மாவா' என்ற போதைப் பொருள் விற்பனை அதிகரித்திருக்கிறது.

Breaking News

இதைச் சாப்பிட்டு பழகிய மாணவர்களின் உடல்நலத்திற்கு பெரும் தீங்கு ஏற்படும் என தெரிந்தே பல சமூக விரோதிகள் பள்ளிக்கூடம் முன்பு உள்ள கடைகளில் மறைத்து வைத்து குட்கா புகையிலை மற்றும் மாவா பொருட்கள் விற்பனை செய்கின்றார்கள்.

இவைகளை அதிக அளவில் புழங்க அனுமதித்து விட்டு , பள்ளிகளில் மன நல ஆலோசகர் நியமிப்பதில் என்ன பயன்? இத்தொழிலில் ஈடுபடுவோர், போலி மது விற்பவர்கள் போல மறைந்திருந்து, தொழில் செய்து பணம் சம்பாதிப்பவர்கள் அதிகரித்து வருவதால், தனிநபர் சுகாதாரக் கேடு ஏற்படுவதை பற்றிய விழிப்புணர்வு பள்ளிகளில் மிக அவசியம் தேவை.

போதை சாக்லேட், பான் மசாலா, 'மாவா' பாக்கு கலாசாரத்தை குறைக்க அரசும், நகராட்சியில் உள்ள சுகாதார துறை அலுவலர்களும், காவல்துறையையினரும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

VIDEOS

Recommended