திருச்சி மலைக்கோட்டை விநாயகருக்கு 150கிலோவில் ராட்சத கொழுக்கட்டை .
JK
UPDATED: Sep 7, 2024, 8:16:14 AM
மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில்
திருச்சி தென் கயிலாயம் என்று போற்றப்படுவது திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில்.
மலைக்கோட்டையின் அடிவாரத்தில் மாணிக்க விநாயகரும், மலையின் உச்சியில் உச்சிப்பிள்ளையாரும், மலையின் நடுப்பகுதியில் தாயுமானசுவாமி, மட்டுவார் குழலம்மையும் எழுந்தருளியுள்ளனர்.
இக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா ஒவ்வொரு ஆண்டும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
விநாயகர் சதுர்த்தி விழா
இந்த வருடத்திற்கான விநாயகர் சதுர்த்தி விழா இன்று காலை கஜபூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து கோவில் மடப்பள்ளியில் தயாரிக்கப்பட்ட 150 கிலோவிலான ராட்சத கொழுக்கட்டையை தொட்டிலில் கட்டி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார், மாணிக்க விநாயகருக்கு தலா 75கிலோவில் படையலிட்டு நைவேத்தியம் செய்யப்பட்டது.
Breaking News in Tamil
இந்த விழாவிற்காக 150 கிலோவில் மிக பிரமாண்டமான கொழுக்கட்டை தேங்காய், பச்சரிசி மாவு, உருண்டை வெல்லம், ஏலக்காய், நெய், பருப்பு உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி இந்த ராட்சத கொழுக்கட்டையை 24மணி நேரம் ஆவியில் வேக வைத்து தயாரிக்கப்பட்டது.
Latest Trichy District Politics
விநாயகர் சதுர்த்தி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாணிக்க விநாயகரையும், உச்சிப்பிள்ளையறையும் தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து விநாயகருக்கு படைக்கப்பட்ட கொழுக்கட்டை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
நிகழ்வுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரிகள் செய்திருந்தனர்.