- முகப்பு
- மாவட்டச் செய்தி
- மாங்காடு அருகே மக்கள் நீதி மைய நிர்வாகி வீட்டில் புகுந்து சரமாரியாக தாக்கிய நபர்களால் பரபரப்பு.
மாங்காடு அருகே மக்கள் நீதி மைய நிர்வாகி வீட்டில் புகுந்து சரமாரியாக தாக்கிய நபர்களால் பரபரப்பு.
S.முருகன்
UPDATED: Sep 14, 2024, 9:49:08 AM
மாங்காடு
மாங்காடு அடுத்த பட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ரியாஸ் கட்டுமான தொழில் செய்து வரும் இவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவரது மகன் பரோஸ் மக்கள் நீதி மையம் கட்சியில் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகியாக உள்ளார்.
இந்த நிலையில் இன்று இவரது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் கையில் பைப்புகளுடன் வீட்டில் இருந்த பொருட்களை அடித்து உடைத்து விட்டு வீட்டில் இருந்தவர்களையும் சரமாரியாக தாக்கியுள்ளனர் இதில் ரியாஸ் அவரது மகன்கள், மகள், மாமா உள்ளிட்ட பலருக்கு இரத்த காயம் ஏற்பட்டது
மக்கள் நீதி மையம்
இதையடுத்து அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் வருவதற்குள் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்
இதையடுத்து காயம் அடைந்த நபர்கள் மாங்காடு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க சென்றபோது இவர்களை வீடு புகுந்து தாக்கிய நபர்கள் மாங்காடு போலீஸ் நிலையத்தில் தங்களை ரியாஸ் குடும்பத்தினர் தாக்கியதாக புகார் அளிக்க வந்த நிலையில் தங்களை தாக்கியது இவர்கள்தான் என்று கூறியதையடுத்து தாக்கி விட்டு புகார் அளிக்க வந்த நபர்களை போலீசார் மடக்கி பிடித்து வைத்து விசாரித்து வருகின்றனர்.
Latest Crime News In Tamil
முதல் கட்ட விசாரணையில் வீட்டில் இருந்த பெண்களிடம் அவதூறாக பேசியதால் ரியாஸ் குடும்பத்தினர் கண்டித்ததாகவும் இதன் காரணமாக அண்ணன், தம்பிகள் தனது நண்பர்களுடன் வீட்டிற்குள் புகுந்து சரமாரியாக தாக்கியது தெரியவந்தது.
மேலும் இதற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா அல்லது காதல் விவகாரமா என்ற கோணத்தில் மாங்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர். மக்கள் நீதி மைய நிர்வாகி வீட்டில் புகுந்து பயங்கர தாக்குதல் நடத்திய காட்சிகள் தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.