• முகப்பு
  • குற்றம்
  • நாம் தமிழர் கட்சி பெண் நிர்வாகி 2வது கணவரை வைத்து முதல் கணவரை தீர்த்து கட்ட முயற்சி

நாம் தமிழர் கட்சி பெண் நிர்வாகி 2வது கணவரை வைத்து முதல் கணவரை தீர்த்து கட்ட முயற்சி

ரமேஷ்

UPDATED: Jul 6, 2024, 5:57:40 AM

நாம் தமிழர் கட்சி பிரமுகர்

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா தேப்பெருமாநல்லூர் ஏ.கே.வி நகரை சேர்ந்த ஹரிபாரதிதாஸ்-இந்திரா தம்பதிக்கு 43 வயதில் ரோக்கேஷ் என்ற மகன் உள்ளார். 

இவர் சிங்கப்பூரில் கணினி பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் கும்பகோணம் பழைய அரண்மனைத்தெருவை சேர்ந்த ராஜன்-நிர்மலா தம்பதியினரின் இளைய மகள் திவ்யாவுக்கும்(35) கடந்த 2016ம் ஆண்டு மே மாதம் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு தீப்தா என்ற 6 வயது மகள் உள்ளார்.

திவ்யா நாம் தமிழர் கட்சி பிரமுகர். இவர் மாநகராட்சி தேர்தலில் அந்த கட்சி சார்பாக கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.  

Latest News In Tamil

இந்நிலையில் ரோக்கேஷை கடந்த ஜூலை 3ம் தேதி இரவு அரசு கல்லூரி ரவுண்டானா பகுதியில் நந்தகுமார் உள்ளிட்ட சிலர் வழிமறித்து ரோக்கேஷ்யை அரிவாளால் சரமாரி வெட்டியுள்ளார்கள். 

இதில் படுகாயமடைந்த அவர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுமார் 35 தையலுக்கு மேல் போடப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ரோக்கேஷ் காவல்துறையிடம் நடந்த சம்பவம் தொடர்பாக புகார் அளித்தார்.

இது தொடர்பாக ரோக்கேஷ் கூறுகையில், தான் சிங்கப்பூரில் பணியாற்றி வந்த நிலையில், என்னை சந்திக்க அவ்வப்போது விசிட்டிங் விசாவில் மனைவி திவ்யா சிங்கப்பூர் வந்து செல்வார். அவ்வாறு வரும்போது சிறுக சிறுக சுமார் 200 பவுன் நகைகளை என்னிடம் வாங்கி வந்தார்.

Latest Kumbakonam News

மேலும், எனது வங்கி கணக்கில் இருந்து, திவ்யாவின் வங்கி கணக்கிற்கு சுமார் ரூ.2 கோடியே 81 லட்சம் அனுப்பி உள்ளேன். அந்த பணத்தில் திவ்யா, தனது மற்றும் தனது பெற்றோர் பெயரில் சொத்துக்கள் வாங்கி குவித்திருக்கிறார். 

இந்நிலையில், திவ்யாவிற்கு, அரசு மதுபான கடை பாரில் சப்ளையராக பணிபுரியும் இன்னம்பூர் மேலத்தெருவை சேர்ந்த நந்தகுமார் என்ற வாலிபருடன் தொடர்பு ஏற்பட்டது.

இதனால் என்னுடன் அடிக்கடி தகராறு செய்து வந்த திவ்யா, கடந்த 2021ம் ஆண்டு விவாகரத்து கேட்டு கும்பகோணம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. 

Latest Crime News

இதனிடையே திவ்யா, நந்தகுமாரை இன்னம்பூர் காளியம்மன் கோயிலில் மாலை மாற்றி, தாலி கட்டி கிராம நடைமுறைப்படி திருமணம் செய்து கொண்டார். 

இவர்களுக்கு கடந்த டிசம்பரில் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் பிறப்பு சான்றிதழில் கணவர் பெயராக நந்தகுமார் பெயரே குறிப்பிடப்பட்டிருக்கிறது. என்னுடைய சொத்துக்களை பறிக்க அவ்வப்போது கொலை மிரட்டல் விடுத்து வந்தார். 

இந்நிலையில் கடந்த ஜூன் 10ம் தேதி கும்பகோணம் அரசு கல்லூரி ரவுண்டானா பகுதியில், ஒரு ரவுடி கும்பல் என்னை தாக்கி படுகாயப்படுத்தியது.

Latest District News in Tamil

இது குறித்து காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என கூறப்படுகிறது. 

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அதே கல்லூரி ரவுண்டானா பகுதியில் நந்தகுமார் உள்ளிட்ட சிலர், என்னை படுகொலை செய்யும் முயற்சியில் வெட்டினார்கள்.அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 

என் மகள் தீப்தாவை என்னிடம் அனுப்ப வேண்டும். மனைவி திவ்யாவுக்கு கொடுத்த ரூ.2 கோடி 81 லட்சம் மற்றும் என்னிடம் மிரட்டி எழுதி வாங்கிய வீடு மற்றும் நகைகளை மீட்டு தர வேண்டும் என்று ரோக்கேஷ் கூறியிக்கிறார்.

இது தொடர்பாக கொலை முயற்சி வழக்கு பதிந்த கிழக்கு காவல்துறையினர், நந்தகுமார் (31), சிவானந்தம்(25), அண்ணாதுரை(29) மற்றும் மதன் (22) ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

VIDEOS

Recommended