பாலியல் புகாரில் சிக்கிய பாஜக எம்.பி. ப்ரிஜ்பூஷனின் மகன் கரன் பூஷனுக்கு பாஜக சார்பில் சீட்
Admin
UPDATED: May 3, 2024, 6:47:04 AM
மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் புகாரில் சிக்கிய பாஜக எம்.பி. ப்ரிஜ்பூஷனின் மகன் கரன் பூஷனுக்கு பாஜக சார்பில் சீட் வழங்கியது குறித்து மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் X தளத்தில் பதிவு.
“நாங்கள் அனைவரும் எங்கள் தொழிலை பணயம் வைத்து, வெயிலிலும் மழையிலும் பல நாட்கள் தெருக்களில் தூங்கினோம். இன்று வரை ப்ரிஜ் பூஷன் கைது செய்யப்படவில்லை. நாங்கள் எதையும் கோரவில்லை. நீதியை மட்டுமே கோருகிறோம்.
கைது செய்வதை விடுங்கள், இன்று ப்ரிஜ் பூஷனின் மகனுக்கு சீட் கொடுத்து நாட்டின் கோடிக்கணக்கான மகள்களின் மன உறுதியை உடைத்துள்ளீர்கள்” - சாக்ஷி மாலிக்