• முகப்பு
  • ஆன்மீகம்
  • மது போதையில் இருந்து மக்களை காப்பாற்றிட நடைபெற்ற சர்வமங்கள மகாயாகம்

மது போதையில் இருந்து மக்களை காப்பாற்றிட நடைபெற்ற சர்வமங்கள மகாயாகம்

ரமேஷ்

UPDATED: Sep 29, 2024, 1:35:39 PM

கும்பகோணம்

சர்வதேச இதய தினமாக கடைபிடிக்கப்படுகிறது இந்த நாளில், மது போதை உள்ளிட்ட பல்வகை போதை வஸ்துக்களால் தமிழகம் சீரழிந்து கொண்டிருக்கும் நிலையில், அதனை மீட்டெடுக்கவும், போதையில்லா தமிழகம் உருவாகிடவும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவன தலைவர் மருத்துவர் ராமதாஸ் அறிவுறுத்தலின் பேரில், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், மாவட்ட செயலாளரும், ஆடுதுறை பேரூராட்சி தலைவருமான ம க ஸ்டாலின் ஏற்பாட்டில்,

கும்பகோணம் ரயில் நிலையம் அருகே, மிகப்பெரிய அளவில், இதுவரை மதுபோதை ஒழிப்பிற்காக யாரும் செய்திராத வகையில், விசேஷ சர்வமங்கல மகா யாகம் இன்று காலை முதல் தொடர்ந்து நடைபெற்றது.

இதில் மருத்துவர் இராமதாஸின் மூத்த மகள் காந்தி பரசுராமன், உட்பட ஏராளமான பெண்கள் மஞ்சள் நிற சேலை உடுத்தி பங்கேற்றனர்,

முன்னதாக இதற்கான புனிதநீர் மற்றும் யாகத்தில் சேர்க்க வேண்டிய மங்கல பொருட்கள் மகாமக குளத்தில் இருந்தும், அபிமுகேஸ்வரர் திருக்கோயிலில் இருந்து தமிழர்களின் நாட்டுப்புற இசை மற்றும் நாதஸ்வர மேள தாளம் மங்கல வாத்தியங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக, யாகம் நடைபெறும் காமராஜர் சாலைக்கு கொண்டு வரப்பட்டது.

தொடர்ந்து அங்கு யாகம் நடைபெற்று, இறுதியில் மது போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவோம் என அனைவரும் உறுதி ஏற்று கொண்டனர். தொடர்ந்து யாகத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது, இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் யாகத்தில் வணிகர் சங்கத்தினர் சர்வ மதத்தினரும் கலந்துகொண்டர்.

 

VIDEOS

Recommended