- முகப்பு
- மாவட்டச் செய்தி
- பெற்றோர்கள் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பாமல் எதிர்ப்பு
பெற்றோர்கள் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பாமல் எதிர்ப்பு
மாரியப்பன்
UPDATED: Jul 18, 2024, 7:43:09 PM
பெரம்பலூர் மாவட்டம்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள வயலப்பாடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளியில் அங்கன்வாடி முதல் எட்டாம் வகுப்பு வரை சுமார் 220 மாணவர்கள் படித்து வருகின்றனர். அப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு போதுமான வகுப்பறை கட்டிட வசதி, விளையாடு மைதானம் ஆகியன இல்லாத நிலையில் அந்தப் பள்ளி செயல்பட்டு வருகிறது.
Latest Education News Online in Tamil
வயலப்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் 2 வகுப்பறை கட்டிடம் பழுதடைந்து விட்டதால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இடிக்கப்பட்டது. அந்த இடத்தில் தற்போது ஒரு வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு பணிகள் துவங்கப்பட்டுள்ளது.
மேலும் இப்பள்ளிக்கு 3 வகுப்பறைக்கட்டிடம் மற்றும் லேப் கட்டிடம் ஒன்றும் கட்ட அரசு அனுமதி வழங்கியுள்ளது. அந்த 2 கட்டிடம் கட்டுவதற்கான தற்போது உள்ள பள்ளி வளாகத்தில் இடவசதி இல்லை.
Education News
ஆனால் ஊருக்கு நடுவில் அரசு சொந்தமான இடம் உள்ளது. அந்த இடத்தில் புதிய கட்டிடங்களைக் கட்டினால் மாணவர்களுக்கு போதிய இடவசதி கிடைப்பதோடு விளையாட்டு மைதானமும் அமைக்கலாம்.
பள்ளி, தற்போது ஊருக்கு மேற்கு பகுதியில் உள்ளதால் கிழக்கு பகுதியிலிருந்து வரும் மாணவர்கள் கனரக வாகனங்கள் செல்லும் பாதையில் ஆபத்தான சூழ்நிலையில் பள்ளிக்கு நடந்து வருகின்றனர்.
Perambalur District News
இந்நிலையில், புதிய இடத்தில் கட்டிடம் கட்டித்தர வேண்டுமென ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி மன்றத் தலைவர், துணைத்தலைவர், பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவர் ஆகியோர்களுக்கு பெற்றோர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்
ஆனால் மக்களின் கோரிக்கையை ஏற்காமல் மீண்டும் பள்ளி வளாகத்தில் உள் பகுதியில் கட்டிடம் கட்ட வேளைகள் ஆரம்பித்ததால் ஆத்திரமடைந்து நேற்று வயலப்பாடி மக்கள் அந்த பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளை பள்ளிக்கு அனுப்பாமல் தங்களது பிள்ளைகளை வீட்டிலே வைத்து கொண்டு எதிர்ப்பை தெரிவித்தனர்
பள்ளி ஆசிரியர்கள்
அதிர்ச்சியடைந்த பள்ளி ஆசிரியர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர் கண்ணதாசன், ஆகியோர் பள்ளி குழந்தைகளின் பெற்றோர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று அழைத்துள்ளனர் பெற்றோர்கள் அனுப்ப மறுத்துள்ளனர்
இதனால் பள்ளி திறந்து இரன்டு மணி நேரம் ஆகியும் குழந்தைகள் பள்ளிக்கு செல்லாததால் அங்கு பரபரப்பு காணப்பட்டது
NEWS
பின்னர் தகவல் அறிந்து வந்த வட்டாச்சியர் கோவிந்தம்மாள், மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் பூங்கொடி, ஆகியோர் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்
பேச்சுவார்த்தையில் இன்னம் சில நாட்களில் வேறு இடத்தை தேர்வு செய்து அங்கு புதிய கட்டிடம் கட்டி இந்த பள்ளியை மாற்றி தருவதாக உத்திரவாதம் அளித்ததை பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.