• முகப்பு
  • குற்றம்
  • போதை வஸ்துகளை வீட்டின் பீரோ மற்றும் கட்டிலுக்கு அடியில் பதுக்கி வைத்து விற்பனை.

போதை வஸ்துகளை வீட்டின் பீரோ மற்றும் கட்டிலுக்கு அடியில் பதுக்கி வைத்து விற்பனை.

லட்சுமி காந்த்

UPDATED: Nov 23, 2024, 9:49:36 AM

ஸ்ரீபெரும்புதூர் 

சுற்றுவட்டார பகுதிகளில் வடமாநிலத்தவர்கள் அதிகம் வசித்து வருவதால், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை வஸ்துகளை , பெரும்பாலான மளிகை கடைகளிலும், ஏராளமான டீக்கடைகளிலும், பெட்டி கடைகளிலும் விற்பனை செய்வது மிகவும் அதிகரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மண்ணூர் மாதா கோவில் தெரு பகுதியில் மணி வயது 59 என்பவர் கடை வைத்து நடத்தி வருகிறார்.

போதை வஸ்துகள் விற்பனை

அதேபோல அம்பேத்கர் தெருவில் தீபா வயது 37 என்பவர் கடை நடத்தி வருகிறார்.

இவர்களுடைய கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை வஸ்துகள் விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு அமலாக்கப் போதைப் பொருள் தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

அதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட போதை தடுப்பு பிரிவு காவல்துறையினர் மண்ணூர் பகுதிக்கு விரைந்து சென்று கடைகளை சோதனை செய்து பார்த்தபோது ஒரு சில பாக்கெட்டுகள் மட்டுமே இருந்திருக்கின்றது.  

Breaking News Today In Tamil

அதனால் அவர்களுடைய வீட்டில் சென்று ஒவ்வொரு இடமாக தேடிப் பார்த்தபோது அரசால் தடை செய்யப்பட்ட" போதை பொருட்களை பெட்ரூமில் கட்டிலுக்கு அடியிலேயேயும், பீரோக்கு அடியிலேயேயும் பதுக்கி வைத்து விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. 

அதனை அடுத்து , வீடு மற்றும் கடைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஹான்ஸ் 71 , கூல் லிப் 22 , சுவாசத் 125, விமல் 1970, வி1 1970 என 4088 பவுச் போதை பொருட்களை பறிமுதல் செய்து மணி மற்றும் தீபா ஆகிய இருவரையும் கைது செய்து ஸ்ரீபெரும்புதூர் காவல்துறை மூலம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

VIDEOS

Recommended