• முகப்பு
  • அரசியல்
  • திருமாவளவனின் ஆட்சியில், அதிகாரத்தில் பங்கு நிலைப்பாட்டை நான் வரவேற்கிறேன் - எச்.ராஜா

திருமாவளவனின் ஆட்சியில், அதிகாரத்தில் பங்கு நிலைப்பாட்டை நான் வரவேற்கிறேன் - எச்.ராஜா

JK

UPDATED: Oct 8, 2024, 8:40:45 PM

திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழக பாஜக ஒருங்கிணைப்பாளர் எச். ராஜா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்

ஜம்மு காஷ்மீரில் கடந்த முறை விட இந்த இந்த முறை அதிக இடங்களை பாஜக பெற்றுக் பெற்றிருக்கிறது.

இந்தியா கூட்டணிக்கு ஹரியான மக்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளனர். மக்கள் பெரும்பான்மை பலத்தோடு வெற்றி பெற செய்துள்ளனர்.

கடந்த இரண்டு நாளுக்கு முன்பாக சென்னையில் நடந்த விமான சாகச நிகழ்ச்சி அரசு எப்படி எல்லாம் ஏற்பாடு செய்யக்கூடாது அப்படி செய்தனர்.

சுகாதாரத்தை அமைச்சர் தண்ணீர் குடிக்கக்கூட ஏற்பாடு செய்யவில்லை. 

சென்னையில் நடைபெற்ற கார் ரேஸ்க்கு 4நாளைக்கு முன்னாடி சென்று சகல பாடுகளையும் பார்க்க முடிந்த அவர் தற்போது துணை முதலமைச்சரான பின்பு அவரது பணியை மறந்துவிட்டார். தற்போது எதையும் பார்க்கவில்லை.

எனவே 5பேர் உயிரிழந்துள்ளனர். 250க்கு மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

சங்கரன் கோவிலில் நடைபெற்ற போதை ஒழிப்பு நிகழ்ச்சியில் கவர்னர் சிந்தடிக் டிரக்ஸ் பொருளை தமிழக காவல்துறை பிடிக்கவில்லை. கஞ்சாவை தவிர எந்த சிந்தடிக் டிரக்ஸ் ஒரு கிராம் பிடிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

மக்கள் 26ல் இந்த ஆட்சிக்கு தக்க பதிலடி கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

ஒரு நாட்டில் தேர்தல் மட்டும் தான் ஒரு விஷயத்தை கான்ஸ்டியூசனாக அப்ரூவ் பண்ணுவதற்கு நம்பர் மட்டும் தான் நினைத்தால் அது தவறு.

தற்போது நடைபெற்ற தேர்தலில் பெரிய அளவில் மக்களுடைய எதிர்பார்ப்பு இருந்தது கடந்த 2014 இல் அப்படி இல்லை 370சட்டத்தை காஷ்மீர் மக்கள் நிரூபித்து காட்டியுள்ளனர் காரணம் காஷ்மீர் மக்கள் அமைதியை விரும்புகிறார்.

காஷ்மீரில் பிஜேபி தனது இடத்தை இழக்கவில்லை பாரதிய ஜனதா கட்சியில் ஓபிஎஸ் இணைவது குறித்து தெரியாது. ஆனால் அவர் முக்கித்துவம் வாய்ந்தவர்  அவர் அறிவித்த பின்பு இது குறித்து கருத்து தெரிவிக்கலாம்.

பாரதிய ஜனதா கட்சி எப்போதுமே பட்டியல் இன மக்களுக்கு முன்னுரிமை தருகிறது.

ஏற்கனவே நான் திருமாவளவனின் டிமான்டி ஆதரித்துள்ளேன். அவருடைய பெயரை சொல்லி திமுக ஓட்டு கேட்டுள்ளது. அவரை மந்திரி சபைக்கு உள்ளே வராதே என சொல்லக்கூடாது.

பிஜேபி பெரும்பான்மையில் ஜெயித்தாலும் கூட்டணி கட்சிகளுக்கு மந்திரி சபையில் இடம் அளித்துள்ளது.

எனவே திருமாவளவன் ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்பது கேட்டது நியாயம்.

மாநாடு நடந்ததால், மது ஒழிப்பு ஒழிந்து விட்டதா? அந்த மாநாடு நாடகம் திமுக, விசிக கூட்டு நாடகம்

மதுவிலக்கு மாநில பட்டியலில் உள்ளது கடையைத் திறந்தது நீங்கள் மூடுவது நாங்களா? இது எப்படி சாத்தியமாகும்.

மதுவிலக்கு கேட்கும் பெண்களை, தமிழக மக்களை ஏமாற்றுவதற்கான கூட்டு சதி.

திருமாவளவன் மதுவிலக்கு எதிரானவர் இல்லை.

தமிழகத்தில் சாராயத்தினால் இளம் விதவைகள் அதிகம் என கூறிய கனிமொழி ஏன் விஷ சாராயத்தில் இறந்தவர்களை, விதவைகளை சென்று பார்க்கவில்லை.

திமுகவின் முதல் குடும்பத்தின் நாடகத்திற்கு திருமாவளவன் சப்போர்ட் .

விஷ சாராயத்திற்கு இவர்களின் தவறு காரணமாக இறந்தவர்களுக்கு 25லட்சம் ஏற்கனவே கொடுத்தார்கள்.

சென்னை பிரதமராக ராஜாஜி இருந்தால் 1937ல் மதுவிலக்கு கொண்டு வந்தார். 1971 வரை குடி என்றால் என்ன என்று தெரியாத ஒரு தலைமுறை இருந்தது. எனவே, ராஜாஜி கட்டவுட் தனது மாநாட்டில் வைத்தார். கருணாநிதி குடிக்க வைத்த என்பதற்காக அவர் கட்டவுட் வைக்கவில்லை.

இதை திருமாவளவன் புரிந்து கொண்டிருக்கிறார்.

புதிய கல்வித் திட்டத்தை 2021 சேறுகிறேன் என்று சொல்லி எழுத்து பூர்வமாக சிவதாஸ்மீனா தலைமைசெயலாளர் பள்ளிக்கல்வி செயலாளருக்கு அனுப்பி இருந்தார்.

வரவேண்டிய தொகை 573கோடி மட்டும் தான் நீதி பணம் எங்கு இருந்து வரும்.

ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் கஜானாவை காலி செய்து கொண்டிருக்கிற திறமையற்ற அரசாங்கம்.

ஆர்எஸ்எஸ்சின் நோக்கம் இந்து சமுதாயத்தில் ஏற்ற தாழ்வுகளை நீக்கி சமத்துவத்தை கொண்டு வருவது. 

திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் பட்டியல் சமுதாயத்தினருக்கான எதிரான குற்றங்கள் 50% அதிகரித்துள்ளது.

ஈவேரா தலித் விரோதி. பட்டியல் சமுதாய எதிராக குற்றங்களை குறைப்பதற்கு ஆர்எஸ்எஸ் தேவை. 

ஆர்.எஸ்.எஸ் வளர்ந்தால் தான் தமிழகத்தில் பட்டியல் இன மக்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்.

சமூகநீதி தேவை என்றால் திமுக ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும்.

சிறுத்தையின் புள்ளிகளை அழிக்க முடியாது, திமுகவின் இந்து விரோத கொள்கை மாறாது. அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள் இதனை ஹிந்துக்களுக்கு புரிய வைக்கும் பணிகள் நாங்கள் இருக்கிறோம் என தெரிவித்தார்.

பேட்டியின் போது அமர்பிரசாத்ரெட்டி, திருச்சி மாவட்ட தலைவர் ராஜசேகர் மற்றும் நிர்வாகி உடனிருந்தனர்.

 

VIDEOS

Recommended