• முகப்பு
  • அரசியல்
  • பிரதமரை விளக்கம் கேட்பதற்கு கூட தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது - திருமாவளவன்.

பிரதமரை விளக்கம் கேட்பதற்கு கூட தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது - திருமாவளவன்.

JK

UPDATED: May 5, 2024, 10:23:00 AM

நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மீண்டும் போட்டியிட்டார். 

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் நடைபெற்ற தேர்தலுக்கான மின்னணு வாக்கு இயந்திரங்கள் அரியலூரில் உள்ள கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது.

மின்னணு வைக்கப்பட்டுள்ள இடத்தை பார்வையிடுவதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தந்த எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் :

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் நடைபெற்ற தேர்தலுக்கான மின்னணு வாக்கு பட்டியல் அரியலூர் வைக்கப்பட்டுள்ளது அதை பார்வையிடுவதற்காக இன்று செல்கிறேன். 

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்கு எந்திரங்களை வைக்கப்பட்ட இடத்தில் சிசிடிவி கேமராக்கள் அரை மணி நேரம் செயலிழந்து உள்ளது. இது விசிக வேட்பாளர் ரவிக்குமார் தேர்தல் அலுவலரிடத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

இதே போல நீலகிரி, ஈரோடு பகுதிகளில் சிசிடிவி கேமரா செயல் இழந்துள்ளது சந்தேகத்திற்கு இடமான சில குளறுபடிகள் நடந்துள்ளன. 

அரியலூரில் பாதுகாக்கப்பட்டுள்ள சிதம்பரம் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் அதனை விடுதலை சிறுத்தை கட்சியினர் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். 

அந்தந்த தொகுதிக்கான தேர்தல் அலுவலகம் சிசிடிவி இயந்திரங்களை கண்காணிக்க வேண்டும், பராமரிக்க வேண்டும் சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் அவைகளை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

பிரதமர் மோடியின் பிரச்சாரத்தில் பெண்கள் தாலி முதல் எருமை மாடு வரை தற்பொழுது பேசி வருகிறார் என்ற கேள்விக்கு ?

பிரதமர் மோடி அண்மை நாட்களாக அவர் பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருக்கிறார். அதை அவர் அவ்வப்போது வெளிப்படுத்துகிறார் அதற்கான சான்றுகள் அவரது உரைகள் அமைந்துள்ளது.

அவருடைய நிலையை மறந்து பொறுப்பை மறந்து மிகவும் கீழிறங்கி போய் அவருடைய விமர்சனங்களை முன் வைக்கிறார். குறிப்பாக தாலியை பறித்து இஸ்லாமியருக்கு கொடுத்து விடுவார் என்ற அளவுக்கு அவர் பேசுவது அவரது பொறுப்புக்கு அழகல்ல அது அவருடைய அச்சத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது. அது அவருடைய அச்சத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.

மோடி பிரச்சாரத்தில் பேசியது தொடர்பாக தேர்தல் ஆணையம் மோடிக்கு கடிதம் அனுப்பாமல் நட்டாவுக்கு கடிதம் அனுப்பப்பட்டது குறித்த கேள்விக்கு ?

தொடக்கத்தில் இருந்து தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் அதிர்ச்சி அளிக்கக்கூடும் வகையாக உள்ளது. இந்த பிரச்சனையில் யார் மீது குற்றம் சுமத்தப்படுகிறதோ அவருக்கு விளக்கம் கேட்டு அறிக்கை அனுப்ப வேண்டும். அப்படி பிரதமருக்கு அனுப்ப வேண்டிய தேர்தல் ஆணையம் அதற்கு மாறாக நட்டாவுக்கு அவர்களுக்கு அனுப்பியது ஏன் என்று விளங்கவில்லை.

தேர்தல் ஆணையத்தின் இந்த அணுகுமுறை ஒரு சார்பாக இருக்கிறது ஆளும் கட்சிக்கு சாதகமான அணுகுமுறையாக இருக்கிறது பிரதமரை விளக்கம் கேட்பதற்கு கூட தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது என்பதை உறுதிப்படுத்துகிறது

மேலும் 5கட்ட தேர்தல் நடைபெற உள்ளது இதில் தேர்தல் ஆணையம் சரியாக செயல்படும் என்று நினைக்கிறீர்களா என்ற கேள்விக்கு சரியாக செயல்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம் 

ஒரு 9ம் தேதி ஆந்திராவில் உள்ள நெல்லூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளேன். எங்களது வேட்பாளர்கள் ஆந்திராவில் போட்டியிடுகின்றனர். நாங்கள் போட்டியிடாத மற்ற தொகுதிகளில் நான் பிரச்சாரம் மேற்கொள்கிறேன்.

இதே போல் மகாராஷ்டிராவில் தாராவில் விட்டுவிடுகிற காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களுக்கும் 1ஆம் தேதி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளேன்.

மகாராஷ்டிராவில் லத்தூர் தொகுதியில் விடுதலைக் கட்சியின் சார்பில் வேட்பாளர் போட்டியிடுகிறார்.

தெலுங்கானாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் 7 தொகுதியில் போட்டியிடுகின்றனர். அங்கு பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறேன். மற்ற இடங்களில் காங்கிரஸ் போட்டியிடுகின்றன அவர்களே ஆதரிக்கிறோம்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள போது டெல்லி முதல்வரை கைது செய்திருப்பது சரியில்ல என்ன கூறும் கருத்துக்கு என்ற கேள்விக்கு ?

ஏற்கனவே இதை சுட்டிக்காட்டி கண்டித்து இருக்கிறோம். இது வரையில் அரசியல் வரலாற்றிலேயே அமலாக்கத்துறையினர் கைது நடவடிக்கையில் ஈடுபட்டதில்லை என சொல்லப்படுகிறது.

முதல்முறையாக அதுவும் ஒரு முதலமைச்சரை பொறுப்பில் இருப்பதை கெஜ்ரிவால் அவர்களை நேரடியாக அமலாக்கத்துறை கைது செய்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்க ஒன்றாகும். 

அதேபோல ஹேமன்சோரன் அவர்களும் பொறுப்புள்ள பதவியில் இருக்கிறார். அவரையும் சிறை பிடித்துள்ளனர். இது தவறான ஒரு தவறான முன் மாதிரி என்று அரசியல் வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். 

நாடு எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறது வழக்கு செய்த பிறகு அதன் பிறகு கைது செய்ய வேண்டிய துறையினரால் தான் கடந்த காலங்களில் கைது செய்திருக்கிறார்கள். ஆனால் இந்த முறை அமலாக்கதுறையினர் கெஜ்ரிவாலை கைது செய்திருப்பது எதற்கு அதிகாரப் போக்கை வெளிப்படுத்துகிறது.

இந்த கைதுகள் இந்தியா கூட்டணிக்கு பின்னடைவு ஏற்படுமா என்ற கேள்விக்கு ?

இந்தியா கூட்டணிக்கு எந்த பின்னடைவு ஏற்படாது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இதனால் பின்னடைவு ஏற்படும்

டெல்லியில் எல்லா தொகுதிகளும் காங்கிரஸ் - ஆம்ஆத்மி கூட்டணி கைப்பற்றும் என்று தெரிவித்தார்.

முன்னதாக திருச்சிக்கு வந்த எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களை கட்சியினர் ஏராளமானோர் பொன்னாடை போற்றி உற்சாகமாக வரவேற்றனர்.

பேட்டின் போது மேற்கு மாநகர மாவட்ட செயலாளர் புல்லட் லாரன்ஸ், பெரம்பலூர் மண்டல செயலாளர் கிட்டு, சிறுத்தைகள் பாசறையின் மாநில துணைச் செயலாளர் அரசு, திருச்சி மண்டல துணைச் செயலாளர் பொன்.முருகேசன் ஆகியவுடன் இருந்தனர்.

  • 3

VIDEOS

Recommended