திருவேற்காடு திமுக நகர மன்ற தலைவர் மீது ஊழல் பட்டியல்.

S.முருகன்

UPDATED: Sep 13, 2024, 6:15:18 PM

திமுக

திருவேற்காடு நகர மன்ற தலைவராக பதவி வகித்து வருபவர் என்.ஈ.கே.மூர்த்தி திமுகவை சேர்ந்த இவர் திருவேற்காடு நகர செயலாளராகவும் இருந்து வருகிறார். 

இந்த நிலையில் திருவேற்காட்டில் 18 நகர மன்ற உறுப்பினர்கள் இருந்து வந்த நிலையில் 10 வது வார்டு நகர மன்ற உறுப்பினராக இருந்து வந்த நளினி குருநாதன் விதிமுறைகளை மீறியதாக நகர மன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

Corruption 

இந்த நிலையில் நகரமன்ற தலைவர் மூர்த்தி பல கோடி ஊழல் செய்திருப்பதாகவும் அது குறித்த ஆவணங்களை கையில் எடுத்துக்கொண்டு அவரது கணவரும் திமுக இலக்கிய அணி துணை அமைப்பாளருமான குருநாதன் மற்றும் அவரது குடும்பத்தினருடன் நகர மன்ற அலுவலகத்தின் முன்பு ஊழல் குறித்த ஆவணங்களை கழுத்தில் மாலையாக அணிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது திருவேற்காடு நகராட்சியில் பல்வேறு பணிகள் செய்யப்படாமல் செய்ததாக பல கோடி ஊழல் நடந்திருப்பதாகவும் மழை வெள்ள காலங்களில் பணிகள் நடந்தது போல் போலியாக பில்கள் எடுத்திருப்பதாகவும் அம்மா உணவகத்தில் உணவு சமைக்காமலேயே சமைத்ததாகவும் கணக்கு காட்டி பல கோடி ஊழல் நடந்திருப்பதாகவும் நகர மன்ற தலைவரின் வார்டில் மட்டும் அதிக பணிகள் நடந்து இருப்பதாகவும்

கொலை மிரட்டல்

பல்வேறு வார்டுகளில் வளர்ச்சி பணிகள் நடைபெறவில்லை எனவும் தன்னை தகுதி நீக்கம் செய்ததில் நகரமன்ற தலைவருக்கு முக்கிய பங்கு இருப்பதாகவும் தன்னை திமுக கட்சியில் இருந்து எடுக்க வேண்டுமென பல்வேறு பணிகளை செய்து வரும் நிலையில் தங்கள் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் எங்கு சென்றாலும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பெண் கவுன்சிலர் என அவதூறாக பேசி வருவதாகவும்,

ஊழல்

ஊழல் செய்யப்பட்ட ஆவணங்கள் தற்போது கையில் இருப்பதாகவும் இது குறித்து கட்சியின் தலைமைக்கும், லஞ்ச ஒழிப்புத்துறை, தணிக்கை துறை அதிகாரிகளுக்கும் அனுப்பிருப்பதாகவும் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். 

இந்த நிலையில் இன்று திருவேற்காடு நகர மன்ற கூட்டம் நடைபெற்ற நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பெண் கவுன்சிலர், நகர மன்ற தலைவர் மீது ஊழல் குற்றச்சாட்டு குறித்த புத்தகத்தை வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

 

VIDEOS

Recommended