ஆற்காடு அருகே வழிப்பறி நாடகம் போலீசாரிடம் வசமாக சிக்கிய பெண் உட்பட 3 பேர்

பரணி

UPDATED: Aug 18, 2024, 7:32:34 AM

வேலூர் மாவட்டம்

அருகே உள்ள ஏரந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த மாணிக்கம்மாள் (வயது 62) இவர்க்கு சொந்தமான 2 1/2 ஏக்கர் நிலம் இராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் பகுதியில் உள்ளது.

இந்த நிலத்தை அரசு தொழிற்பேட்டை விரிவாக்கத்திற்கு எடுக்க உள்ளதாகவும், இதன் மதிப்பு சுமார் ஒரு கோடியே 13 இலட்சம் என்று கூறி அரசிடம் இருந்து பெற்று தருவதாக கூறி சைனாப்பற்றை பகுதியை சேர்ந்த சுவாதி வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் அலுவலராக வேலை செய்வதாக கூறி

இராணிப்பேட்டை அடுத்த ஏகாரம்பரல்லூர் பகுதியை சேர்ந்த ஜெயகாந்தன் நிலம் உரிமையாளரின் வெஸ்லி ஜோசப் மனைவி மெர்லின் ஜெனிபர் ஆகியோரியிடம் இருந்து ரூபாய் 5 இலட்சம் பணத்தை இருவரும் பெற்று கொண்டு வேலூரை நோக்கி மோட்டார் சைக்கிளில் செல்லும் போது, ஆற்காடு அடுத்த வேப்பூர் அருகே பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் பணத்தை பறித்து கொண்டு சென்றனர். 

அவர்களை பின் தொடர்ந்தது போது ஒரு இலட்சம் ரூபாய் மட்டும் சாலையில் போட்டு விட்டு தப்பிச்சென்றதாக வெஸ்லி ஜோசப் மனைவி மெர்லின் ஜெனிபர் ஆகியோரியிடம் தெரிவித்ததால் அவர்கள் ஆற்காடு நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தன் பேரில் ஆற்காடு நகர போலீசார் சுவாதி மற்றும் ஜெயகாந்தனை பிடித்து தீவிர விசாரணை செய்ததில்  ஜெயகாந்தன், சுவாதி ஆகிய இருவரும் வேலூர் வசந்தபுரம் பகுதியை சேர்ந்த பரத் என்பவரிடம் ரூபாய் 4 இலட்சம் கொடுத்து அனுப்பியது தெரியவந்தது.

இது குறித்து புகாரின் பேரில் பணம் மோசடியில் ஈடுபட்ட ஜெயகாந்தன்(53), சுவாதி (35), பரத் (31)ஆகியமூன்று பேரையும் கைது செய்து ரூபாய் 5 இலட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

VIDEOS

Recommended