உணவில் கலக்கும் மைக்ரோ பிளாஸ்டிக்.

கார்மேகம்

UPDATED: Aug 8, 2024, 2:19:48 PM

பிளாஸ்டிக் 

பிளாஸ்டிக் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது தற்போது மனித உடலுக்குள் கலக்கும் அளவிக்கு மோசமான நிலையை உருவாக்கி உள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது

இதனால் புற்று நோய் உள்பட பல்வேறு நோய்கள் அதிகரிக்கும் அபாயம் எழுந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

உடலுக்குள் மைக்ரோ பிளாஸ்டிக் நுழைவதை தடுக்க சில வழிமுறைகளை விஞ்ஞானிகள் கூறுகிறார்கள் :

பிளாஸ்டிக் பாட்டில்களை தவிர்த்து கண்ணாடி அல்லது துருப்பிடிக்காத உலோகங்களால் ஆன தண்ணீர் பாட்டிலை பயன்படுத்தலாம்

குடிநீர்

பல இடங்களில் குடிநீரிலும் மைக்ரோ பிளாஸ்டிக் கணிசமாக இருப்பது தெரியவந்துள்ளது 

எனவே குடிநீரை பிடிக்கும் போது உயர்தர  நீர் வடிகட்டியை பயன்படுத்துவதால் வடிகட்டிகள் குடிநீரில் இருக்கும் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்களை அகற்றுவதில் பயனுள்ளதாக இருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன

அதே போல பிளாஸ்டிக் காகிதங்களில் சுற்றப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது பிளாஸ்டிக் குடம் வாளி போன்ற கொள்கலன்களில் தண்ணீர் மற்றும் உணவு பொருட்களை வைக்கும் போது சூட்டினால் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் உணவில் கசியும் இந்த ஆபத்தை குறைக்க உணவை கண்ணாடி அல்லது துருப்பிடிக்காத பாத்திரங்களில் சேமிக்கலாம்

Food

தற்போது பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் பெருமளவு கலந்துவிட்டதால் மீன்கள் உள்ளிட்ட கடல் உணவுகளிலும் மைக்ரோ பிளாஸ்டிக்கின் தாக்கம் காணப்படுகிறது இதனால் முடிந்த அளவுக்கு உள் நாட்டு நீர்நிலைகளில் பிடிக்கும் மீன்களை உணவாக உட் கொள்வது நல்லது

பிளாஸ்டிக் கொள்கலன்களில் உணவை சூடாக்கும் போது மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் உணவில் கலக்கும் இதனை தவிர்க்க மைக்ரோ ( வேவ்) அல்லது பாதுகாப்பான கண்ணாடி அல்லது பீங்கான் கொள்கலன்களை பயன்படுத்தலாம் இந்த உத்திகளை செயல்படுத்துவதன் மூலம் உணவில் உள்ள மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் வெளிப்பாட்டை கணிசமாக குறைக்கலாம்

பித்தளை | மண்குடம் 

இதனால் உடலுக்குள் மைக்ரோ பிளாஸ்டிக் நுழைந்து புற்று நோய் உள்ளிட்ட கொடிய நோய்களால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்கலாம் தண்ணீரை சேமிக்கும் கொள்கலன்கள் பித்தளை சில்வர் மண்குடம் போன்ற துருப்பிடித்தகாத வற்றை பயன்படுத்த வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்துகின்றனர். 

 

VIDEOS

Recommended