- முகப்பு
- மாவட்டச் செய்தி
- காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு பணிக்கு அனுப்பக் கோரி டெங்கு மஸ்தூர் பணியாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம்.
காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு பணிக்கு அனுப்பக் கோரி டெங்கு மஸ்தூர் பணியாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம்.
ராஜா
UPDATED: Aug 1, 2024, 4:42:43 AM
தேனி மாவட்டம் கம்பம்
அருகே உள்ள காமய கவுண்டன்பட்டி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை போராட்டம்.
கடந்த 13 வருடங்களாக பணியாற்றி வந்த டெங்கு ஒழிப்பு மஸ்த்தூர் பணியாளர்களை பேரூராட்சி நிர்வாகம் கடந்த சில மாதங்களாக வேலை இல்லை என்று அலைக்களிப்பதாக புகார்.
Theni News & Live Updates
இந்த டெங்கு ஒழிப்பில் கடந்த 13 வருடங்களாக பணியில் இருந்த 20 பணியாளர்கள் அவர்களில் 12 பேரை மட்டும் வேலையிலிருந்து நீக்கியதற்கான காரணம் கூற பேரூராட்சி நிர்வாகம் மறுக்கிறது இதில் தேனி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து எந்த நடவடிக்கையும் இல்லை என்றும் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் அவர்களிடம் மனு கொடுத்தும் எந்த பலனும் இல்லை என்றும் கூறப்படுகிறது.
டெங்கு
இதனால் இன்று காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி அலுவலகத்தை டெங்கு மஸ்துர் பணியாளர்கள் முற்றுகையிட்டு கோசங்களை எழுப்பினர்.
இதனால் காமகவுண்டன்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.