• முகப்பு
  • சென்னை
  • வெளிநாட்டில் இருந்து வந்தவர் தவறவிட்ட பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்த போக்குவரத்து போலீசார்.

வெளிநாட்டில் இருந்து வந்தவர் தவறவிட்ட பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்த போக்குவரத்து போலீசார்.

S.முருகன்

UPDATED: Aug 8, 2024, 8:51:36 AM

சென்னை போரூர்

போக்குவரத்து போலீசார் மவுண்ட் சாலையில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர் அப்போது போரூர் முகலிவாக்கம் அருகே ஒரு காரில் இருந்து மற்றொரு காருக்கு ஏறி சென்ற நபர் தனது பர்சை கீழே தவறவிட்டார்.

அதனை எடுத்து வைத்திருந்த போக்குவரத்து போலீசார் திறந்து பார்த்த போது வெளிநாட்டு பண நோட்டுகளும், கிரெடிட் கார்டுகள் இருந்தது ஆனால் அதன் உரிமையாளர் யார் என தெரியாமல் இருந்த நிலையில்

Latest and Breaking Chennai News

போரூர் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் அது குறித்து விசாரணை மேற்கொண்டார் விசாரணையில் பணப்பையை தவறவிட்டது போரூர், அன்னை வேளாங்கண்ணி நகரை சேர்ந்த ஹரிஷ் கண்ணன் என்பதும் தெரியவந்தது. 

இதையடுத்து அவரை நேரில் வர வைத்து அவரிம் ஒப்படைத்தனர் மேலும் ஜப்பான் நாட்டில் இருந்து தமிழகத்திற்கு வந்தவர் காரில் வந்ததாகவும் கார் டிரைவருடன் ஏற்பட்ட வாக்கு வாதத்தின் காரணமாக தான் பயணித்த காரில் இருந்து மற்றொரு காருக்கு மாறி செல்ல இருந்த போது பர்ஸை தவறவிட்டதும் தெரிய வந்தது

Chennai News

இதையடுத்து அவரிடம் வெளிநாட்டு மற்றும் உள்ளூர் ரூபாய் நோட்டுகள் இருந்த 25 ஆயிரம் பணம் மற்றும் ஆறு கிரெடிட் கார்டுகள் உள்ளிட்டவற்றை ஒப்படைத்தனர் 

இதனை பெற்றுக் கொண்ட அந்த நபர் போக்குவரத்து போலீசாருக்கு நன்றிகளை தெரிவித்துவிட்டு சென்றார்.

 

VIDEOS

Recommended