- முகப்பு
- மாவட்டச் செய்தி
- ரயில் தண்டவாளம் இடையே சிக்கிய முதியவரை மீட்ட ரயில்வே காவல்துறை - ரயில் நிலையத்தில் பரபரப்பு
ரயில் தண்டவாளம் இடையே சிக்கிய முதியவரை மீட்ட ரயில்வே காவல்துறை - ரயில் நிலையத்தில் பரபரப்பு
JK
UPDATED: Aug 27, 2024, 10:00:49 AM
திருச்சி
திருச்சி கருமண்டபம் விஸ்வாஸ் நகரை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (75) ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்.
இன்று காலை காரைக்குடியில் இருந்து சென்னை செல்லும் பல்லவன் விரைவு வண்டி மூலம் தாம்பரம் செல்வதற்காக வந்தார். பல்லவன் விரைவு வண்டி திருச்சி ரயில் நிலையத்தில் வந்து அடைந்த போது ரயில் நிற்பதற்கு முன்பாக ஏற மூயற்ச்சிதாக கூறப்படுகிறது.
Latest Trichy District News
அப்போது கால் இடறி ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையில் சிக்கினார். அங்கு சரக்கு கையாளும் பகுதியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை ராமச்சந்திரன் அங்கிருந்து பயணிகள் உதவியுடன் உடனடியாக சிக்கி இருந்த அவரை அங்கிருந்து மீட்டார்.
அதிர்ஷ்டவசமாக சிறு காயத்துடன் ஜெயச்சந்திரன் உயிர் தப்பினார். தொடர்ந்து அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். இதன் காரணமாக திருச்சி ரயில் நிலையத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டு ரயில் தாமதமாக புறப்பட்டு சென்றது.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு