திருத்தணி முருகன் திருக்கோயிலில் ஆடி கிருத்திகை விழா காவடிகளுடன் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
சுரேஷ்பாபு
UPDATED: Jul 29, 2024, 5:21:05 PM
திருத்தணி ஆடி கிருத்திகை
முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாக போற்றப்படும் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சிறப்பு பெற்ற ஆடி கிருத்திகை தெப்ப திருவிழா சனிக்கிழமை ஆடி அஸ்வினியுடன் தொடங்கியது.
மூன்றாம் நாளான இன்று ஆடிக் கிருத்திகை விழாவையொட்டி மூலவர் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடைபெற்றது
முருகப்பெருமானுக்கு காவடி செலுத்த லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து விடிய விடிய காத்திருந்து முருகப்பெருமானை வழிபட்டு வருகின்றனர்.
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து மலைக் கோயிலில் குவிந்து வருவதால், காவடிகளின் ஓசைகளும், அரோகரா முழக்கங்களும் பம்பை, உடுக்கை முழங்க பக்தர்கள் புஷ்ப காவடி, மயில் காவடி, பன்னீர் காவடிக்களுடன் முருகனின் பக்தி பாடல்களுடன் பரவசம் பொங்க மலைக் கோயிலில் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து காவடி மண்டபத்தில் முருகப்பெருமானுக்கு காவடிகள் செலுத்தினர்.
586 சிறப்பு பேருந்துகள் மற்றும் மூன்று சிறப்பு ரயில்கள் 400 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றன.