• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • 20 பிடிஓ க்களுக்கு மாறுதல் அளித்து பதவி உயர்வில் சென்ற கூடுதல் ஆட்சியர் ஊழல் புகாரில் சிக்கி யவர்களுக்கு நல்ல இடம் ஒதுக்கீடு.

20 பிடிஓ க்களுக்கு மாறுதல் அளித்து பதவி உயர்வில் சென்ற கூடுதல் ஆட்சியர் ஊழல் புகாரில் சிக்கி யவர்களுக்கு நல்ல இடம் ஒதுக்கீடு.

ராஜ் குமார்

UPDATED: Jul 28, 2024, 7:30:31 PM

திருவள்ளூர் மாவட்டம்

திருவள்ளூர் மாவட்டத்தில 20 பிடிஓ க்களுக்கு திடீரென மாறுதல் அளித்துவிட்டு பதவி உயர்வில் சென்றுள்ளார் கூடுதல் ஆட்சியர் சுபபுத்ரா.

இதற்காக பல லட்சங்கள் கை மாறியதாக புகார் எழுந்துள்ளது.

ஊழல் புகாரில் சிக்கியவர்களுக்கும் நல்ல இடங்கள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.  

இம்மாவட்டத்தில் திருவள்ளூர், திருத்தணி, வில்லிவாக்கம், புழல், சோழபுரம், கடம்பத்தூர், திருவாலங்காடு, ஆர்.கே பேட்டை உள்பட 14 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் உள்ளன.

 

Latest Thiruvallur District News 

ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையில் ஒருவரும், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையில் ஒருவரும் ஆக மொத்தம் 28 அலுவலர்கள் பணியாற்றுகின்றனர்.

இவர்களில் புழல் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றிய சித்ரா பெர்ணாண்டோ மீது ஊழல் புகார் உள்ளது.

அவர் பல லட்சங்களை தள்ளியதால் அதே இடத்தில் அவருக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டடிருப்பது குறிப்பிடத்தக்கது.


ஊழல் புகார்

இதே போன்று புழல் வட்ட வளர்ச்சி அலுவலர் மணி சேகர் மீதும் ஊழல் புகார் இருப்பதாக கூறப்படுகிறது.

அவர் கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலராக பணி மாறுதல் பெற்றுள்ளார்.

தற்போது நடைபெற்ற பணியிட மாறுதலில் புகாரில் சிக்கி உள்ள இருவர் மீது நடவடிக்கை தொடராமல் வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையில் பணி மாறுதல் வழங்கப்பட்டதை அறிந்த மற்ற வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கொதித்து எழுகின்றனர்.

என்னதான் தவறு செய்தாலும் ஊரக வளர்ச்சி முகமை அலுவலக அலுவலர் கண்டு கொள்ளவே மாட்டாரா?

நாமும் ஏன் தவறு செய்யக்கூடாது என்ற எண்ணம் பலருக்கு தோன்றியுள்ளது .

லஞ்சம்

தாங்கள் விரும்பிய இடத்திற்கு பணிமாறுதல் கிடைக்க கூடுதல் ஆட்சியராக பணியாற்றிய சுப புத்திரா, திட்ட அலுவலர்களுக்கு பல லட்சம் கொடுத்து பிடிஓக்கள் பணி மாறுதல் பெற்றதாக கூறப்படுகிறது .

கடந்த ஆண்டு 12.7.23 ல் பணியில் சேர்ந்த சுப புத்திரா அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர் இடமும் மாதா மாதம் பணம் வசூலித்ததாக கூறப்படுகிறது.

மேலும், ஊரக வளர்ச்சி முகமை மூலம் நடைபெறும் அனைத்து வளர்ச்சி திட்ட பணிகளுக்கும் ஒரு சதவீதம் பணம் கேட்டதாகவும் பேசப்படுகிறது.

கடந்த 24 ஆம் தேதி அவர் பதவி உயர்வு பெற்று திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராக பதவி ஏற்றுள்ளார்.

 

அதே நாளில் கூடுதல் ஆட்சியர் பொறுப்பில் உள்ள மணிமாறன் பெயரில் 20 வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் பணி மாறுதலுக்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

கூடுதல் ஆட்சியரை போன்று வேலை முடித்த ஒப்பந்தக்காரர்களிடம் ஒரு சதவீதம் பணம் கொடுத்தால்தான் பில்லுக்கான பணம் வழங்கப்படும் என அலுவலகம் செயற் பொறியாளர் செந்தில்குமார் எழுதப்படாத ஒரு விதியை வைத்து மூட்டை கட்டி வருகிறார்.

இந்த அலுவலகத்தில் மட்டும் வேலை நேரம் காலை 9.30 மணி முதல் மாலை 5.45 வரை அல்ல. அதிகாரிகள் ஆய்வு பணிக்கு சென்று விடுவார்கள்.மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அலுவலகம் இயங்குமாம்.

அந்த நேரத்தில் தான் ஒப்பந்தக்காரர்கள் புடைசூழ வருகை தந்து கொடுப்பதை கொடுத்து வேலையை முடித்துக் கொள்வதாக ஊரக வளர்ச்சி முகமை அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

VIDEOS

Recommended